அலைபாயுதே
![](https://eluthu.com/images/loading.gif)
பூங்காற்றோடு மிதக்கும் ஊஞ்சலாய்
நுனிவிரல் மந்திரத்தில் அடக்கமாய்
ஊடலில் பின்னிய உறவாய்
மந்தகாசம் மறைத்திடும் திரையாய்
உலாவும் காரிருள் மேகக்கூட்டங்களாய்
கொஞ்சலில் கூத்தாடும் அலைகளாய்
பென்மையின் மேன்மை வீசும் வாசமாய்
கருங்கூந்தலவளின் கிறக்கத்தில் நான்...!