வண்ணம் தொலைந்த ஓவியம்

" வண்ணம் தொலைந்த ஓவியம்""

தூறலாய் சில உணர்வுகள்.
துள்ளியன ஆழ்மனத்தினில்....

மறந்திருந்த கசந்த காலங்கள் மடை திறந்தாற்போல்
மனத்தைத் துளைத்து வெளியேறின......

பறந்து செல்ல வழி தெரியாமல்,
மரங்கொத்திகளாய் எனையே துளைத்தெடுத்தன...

சிரங்குகளில் மொய்க்கும் ஈக்களைப் போல், என்மனப்புண்ணைக் கிளறியே சீழ்பிடிக்க வைக்கின்றன...

இறந்துவிட்ட நினைவுகளுக்கு இம்மியளவில் இடங்கொடுத்ததால்,
கறந்து விட்டன மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும்..

இறக்கைகள் ஒடிந்து ஊனமாய்..
என்னைப் போலவே என்னுணர்வுகளும்...
இயலாமைப் புகையில் மூச்சுத் திணறுகின்றன...

கரைந்ததென் வாழ்வு...
கரை சேர்க்க துணையில்லாமல்.

விரைந்து வந்துவிடு,
விதியே,. ..
விலக்கிப் பிரித்து விடு..
இப்புவியையும்..
இப்பாவையையும்..
.
.
பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (27-Mar-18, 7:26 pm)
பார்வை : 100

மேலே