உன் முகம்
வருவாய் என எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்.........
உன் நினைவுகள் மட்டுமே
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்க இப்போது
நீ எப்படி இருப்பாய்?
நினைவிலாடிய முகம்
நிஜத்தை தாங்காது.....!!
என் கனவிலாவது நீ
கருணையோடு வருகிறாயே...!
கனவில் பார்த்து பார்த்து.,
நிஜமும் நிழலாய்த் தெரிய
உன் முகம் மறந்த நான்..
வழிகாட்டத் தெரியா ஊமை
போல ....!அதற்கு முன்பே
வந்து விடு ..,நான் நீ என நினைத்து நிஜம் மறந்து
போகும் முன் வந்து விடு அன்பே...!