நாஞ்சில் ஓருமைகள் 4

நாஞ்சில் ஓருமைகள்

கன்னி பூ அறுப்பு முடிஞ்சுற்று. வயலு ஏதும் இன்னும் நடவாகல்லே. அறுத்த அறுவங் குறுவை தாளுகளும் இன்னும் அழுகல்லே. வாத்துக்கார பரமசிவம் வாத்து மேய்க்கேரு தென்கால் புரவு முச்சூடும்.

சொள்ளமாடங்கோயில அடிப்பிச்சால உள்ள வயலுல பத்தயாபுரை வீட்டு தொழுப்பொறப்போ வைத்தியசாலை வீட்டு தொழுப்பொறப்போ அயித்திற்றேன் எருமக்கிடாவு ரெண்டெண்ணம் நோக்காட்டுல செத்ததை சாயிபு தோல உரிச்சுற்று போட்டுற்று போறேரு.

எப்புடிதான் தெரியுமோ எம்மா எவ்வளவு காக்கையோ. நம்மட ஊருல இருக்க பட்டிகளு நாடாக்குடி பள்ளக்குடி ஈழவக்குடி குறக்குடில இருக்க எல்லா பட்டியோளும் பத்து நூறண்ணம் வந்திற்று.

தென்காலு புரவு முச்சூடும் ஒரே ஓரியாட்டமா இருக்கு .
கலியாண பொத்தைல இருக்க கள்ள பிராந்து தாடகை மலை மொட்ட கழுகுக எல்லாமே ஒரு மணிக்கூருக்கம் வந்திற்று.

யெப்பா எத்தா தண்டிக்கு இருக்குவோ.
அரைமணிக்கூருல செத்த மாடுக ரெண்டையும் விலா தனியா செப்பு தனியா தலை தனியா செப்பு செப்பா பிச்சு திங்கதை பொசலாத்து போயி பாத்திற்று இருக்கைல...

யாரோ ஒரு ஊச்சாளி அந்தா அந்த மொட்ட கழுகுக்க காலை பிடிக்கானே.
பம்மி பம்மி காலுகள புடிச்சிற்றானே.

ஐயயோ அந்த கள்ள பிராந்து அவனை இழுத்திற்று ஓடுகே. அவனும் அசங்காம அதுக்க காலை விடாம இருக்கானே.

கழுகு இப்பம் பறக்கையில்லா செய்யு.
ஏடே விடுன்னா கேக்கானா..

பள்ளிக்கூட பீப்பாறை பக்கத்தில போயிற்றே பாறைல போட்ருமோ..
கொல்லாண்டோ குட்டியப்போன்னு
எல்லாருமா பொறத்தால ஓடுகோம் வயலு தாளுகோ காலை அறுக்குல்லா வேகம் எடுக்க ஏலல்லே.
கேட்டாபுள்ள வெச்சு அந்த கழுகை யாரோ நெக்கில அடிச்சா.

ஆனாலும் அவனும் விடுகானா பாரு.
வம்பாத்துக்கே போயிற்று பின்னை மரத்துல தான் அவனும் கைய விடுகான்.

தப்பிச்சோம் புழைச்சோம் அந்த மொட்டை கழுகு விட்டம் போகு...

இன்னிக்கு மொட்ட பிராந்தையும் செத்த மாட்டையும் காண ஏலமாட்டக்கே....

ஏன்????

எழுதியவர் : (27-Mar-18, 8:59 pm)
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

மேலே