சிவோஹம் சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவோஹம் சுப்ரமணியன்
இடம்:  அந்தியூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2018
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  12

என்னைப் பற்றி...

ஆன்மீகம் மற்றும் தமிழ் விருப்பம்

என் படைப்புகள்
சிவோஹம் சுப்ரமணியன் செய்திகள்
சிவோஹம் சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2018 8:28 pm

நாஞ்சில் ஓருமைகள்.

நா நாலாப்பு படிக்கையில புதுசா பள்ளியூடத்துல எங்க கூட சேந்தான் சுந்தரு.

நல்ல படிப்பான் யெங்கூடவே இருப்பான் . அவனுக்கு கோயமுத்தூர் தான் சொந்த ஊரு. அவ்வோ அப்பா பாட்டு வாத்தியாருன்னு சொல்லுவான். நல்ல பாடுவான்.

கோயமுத்தூர் கார பொடியன் நம்மட ஊருல என்னாத்த செய்யான்னு கேக்கேளா.

சொல்லுகேன்.

நம்மட பாடசாலை இருக்குல்லா மேலூருல, அங்கே நம்ம கண்ணனுக்க அப்பா வேதம் சொல்லி குடுப்பேருல்லா.... அதுக்கு தான் சுந்தரை அவ்வோ அம்மையும் அப்பாவும் அனுப்பிருக்கா.

அவ்வோ அண்ணன் வேறையும் பத்து பதினைஞ்சு பயக்கோ தெக்கே கிழக்கே உள்ள ஊருகளில இருந்து வந்து மேலூரு கிராமத்தில தங்கி வேதமும் படிச்

மேலும்

சிவோஹம் சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2018 8:25 pm

தெற்றிப்பூ வாசத்திலே தெவிட்டாத செண்பகமே.
பிச்சிப்பூ வாசத்துக்கு பித்து கொண்ட நீலியம்மா.

கண்டாலே பயமாமே கறுப்பி உன்னுருவம்,
கொண்ட மாலை குடலாமே குழந்தையுள்ள ஒக்கலுக்கு,
முகமுழுசும் நாக்காமே முடியாத சடைக்காரி.

காலகாலர் ரத்தினமே
கைகாரி உன் அருளால்
காலன் வருவதையும்
கண்ணியமாய் சொல்லுவாயே.

நீலி நீ திரிசூலி நீங்காத பொட்டுடையாய்.

காவலுக்கு வார நீயும் கண்ணிரண்டில் சேலுடையாய்.

இயக்கி அம்மை நீயும் என்னுயிரை காத்திடுவாய்.

கேணியருகில் என்னை கீழ்வீழாது காத்தவளே.

பாணி அடித்தாலே பறந்தோடி நீ வருவாய்.
உறுமி உறுமினாக்கோ உருண்டோடி வந்திடுவாய்.
பம்பை ஓசையிலே பாடம் மகற்கெடுப்பாய்.

மேலும்

சிவோஹம் சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2018 6:50 am

நாஞ்சில் ஓருமைகள்.


தை பொறந்தா வழி பொறக்கும் ன்னு சொலவடை சொல்லுவா ஆச்சி. ஆமா இனி எல்லா சனியாச்ச ஞாயிறாச்ச விடியம்பற பல்லே தேய்க்காமே பயினி குடிக்கலாம்லா.

ஊரம்மன் கோயிலு கோணம் கீழமல தாவரத்துல இருக்குல்லா அத அடுப்பிச்சு தான பனைமரங்கோ நெறைய இருக்கு.

நம்ம களத்து சோலி பாக்க காணி பாட்டா கிட்ட அப்பா சனியும் ஞாயிறும் பயினி கொண்டாந்து குடுக்க சொல்லியிருக்காள்லா அதனாலே தவறாமெ பயினி கெடைக்கும். நாங்கோ குடிச்சிற்று மிச்சமிருக்க பயினிய அம்மை ஆப்பமாவுக்கு எடுப்பா. அதுனால திங்களாச்ச தீர்ச்சயா ஆப்பமும் மசலாகறியும் தான்.

பயக்கோ நாங்க பயினி குடிக்க மலைக்கு போகாண்டான்னு அப்பா ஏம்மா சொல்லுகான்னு கேட

மேலும்

சிவோஹம் சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2018 6:46 am

மன்னாதி மன்னவரே

மாயாண்டி சுடலை ஈசா

என் ஆதி அந்தமதை
எனக்கு சொன்ன சுடலை ஈசா.

கொண்டு வந்தது எதுவுமில்லை குடம் உடைத்து சொன்ன ஈசா.

மைந்தனில்லை பேரனில்லை கொள்ளி வைத்து சொன்ன ஈசா.

மகளுமில்லை தங்கையில்லை பூத்தூவி சொன்ன ஈசா.

தாரமில்லை தாலியில்லை தாளழுது சொன்ன ஈசா.

விதியதனால் பிறப்பெடுத்தேன் விரைந்து வந்து கூட்டிச்செல்லும்

கூடு நீக்கி நாழியாச்சு
குறைவில்லாதே கூட்டிச்செல்லும்.

நாறும் என்மெய் எரியலாச்சு நலமுடனே கூட்டிச்செல்லும்.

கண்டமது கருகலாச்சு
களித்தேன் வருவேன்
கூட்டிச்செல்லும்.

நெஞ்சுக்கூடும் நெருப்பிலாச்சு நிறைவாய் வந்தேன்
கூட்டிச்செல்லும்.

என் மண்டையோடும

மேலும்

சிவோஹம் சுப்ரமணியன் - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
சிவோஹம் சுப்ரமணியன் - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2018 10:52 pm

பல மதங்களைப் பின்பற்றுவோரும் பல மொழிகளைப் பேசுவோரும் வாழும் நாட்டில் மதவாத அரசியல் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுமா? தடையாக இருக்குமா? சான்றுகளுடன் பதில் அளிக்கவும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு பதில்களைப் பதிவு செய்யுங்கள்.

மேலும்

தாங்கள் சொல்வது உண்மையே. தீவிரவாதிகள், மதவெறியர்கள் மதத்தை அல்லவா துணைக்கு அழைக்கிறார்கள். 05-May-2018 7:25 pm
மனிதநேயம் இல்லாதவர்களும் தங்களை இறை நம்பிக்கையுள்ளவர் என விளம்பரம் செய்கிறார்களே. ஆன்மீகம் பேசுவோரும் இறை நம்பிக்கையுள்ளதாகச் சொல்பவர்களும் நல்லவர்களாக இருந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய், பித்தலாட்டம் ஊடகங்களில் செய்தியாகவர வாய்ப்பு இல்லாமல் போய்விடுமே. எல்லாம் வர்த்தக மயம். 05-May-2018 7:22 pm
மதம் சாராது யாரும் இந்நாட்டில் இல்லை. மதவாதம் என்பது அடுத்தவர் நம்பிக்கையை குறைத்து பரப்புரை செய்வது. குற்றம் கண்டுபிடிக்க மதத்தை நாடுவது துணைக்கு அழைப்பது.கடவுள் மறுப்பு ஒரு மதமே. என் அடையாளம் சொல்வது மதவாதம் ஆகாது. என் அடையாளம் நீங்கள் ஏற்கவேண்டும் என்பதே மதவாதம். மத சார்பின்மை குற்றம் காண்பதில் பாதுகாப்பதில் இருக்க வேண்டும். குற்றம் புரிபவனுக்கு துணைபோகாதிருப்து தான் மதச்சார்பின்மை. 26-Apr-2018 10:06 pm
தங்கள் கருத்து ஏற்புடையதே. அரசியல்வாதிகளும், பிரபலங்களும், அரசு ஊழியர்களும் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருத்தல் நல்லது. கடவுள் நம்பிக்கையை அவரவர் மனதிற்குள்ளும் வழிபாட்டுத்தலங்குள்ளும் இருப்பதே நல்லது.மதச் சடங்குகளை பொது இடங்களுக்குக் கொண்டு வருவதைத் தவிர்க்கவேண்டும். சான்றிதழ்களில் சாதி மதத்தை நீக்கவேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறும் நிலையை உருவாக்கவேண்டும். கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் மதத்திற்கு இடமளிக்கக்கூடாது. இதுவே நான் விரும்பும் மதச்சார்பின்மை. 19-Apr-2018 9:34 pm

நாஞ்சில் ஓருமைகள்.

உத்திரம்

கேசனேரி பத்து வயலு கரையில உள்ள சாத்தாங்கோயிலுக்கு தான் நாங்கோ பங்கனி உத்தரத்துக்கு பாயசம் வைக்க போவோம்.

கலியாண பொத்தை வடக்க தாவாரத்துல வயலுக்க கரையில
அஞ்சு நாகருகளோட புள்ளையாரும் வடக்க பாத்தால இருப்பா. சாத்தா மட்டும் மேக்க பாத்திற்று இருப்பேரு.

அப்பாற்ற நம்மட குடும்ப சாத்தாவான்னு கேட்டதுக்கு " இவரு தாம்டே நமக்கு சோறு போடுகேரு.இவரு இங்ஙன இருக்கேது நால தாம் மக்ளே நம்மட வயலுகோ நல்ல வெளயு. ராசாக்கமாரு கும்பிட்ட சாத்தா இவரு. ராஜா பயிரு வெச்ச வயலுடே இதெல்லாம். யாரும் கண்டுகிடாம இருக்கைல நாம தான்டே இவர ஆராட்டணும். நம்ம குடும்ப சாத்தாவை கும்பிட ஆளுகோ நெறய இருக

மேலும்

சிவோஹம் சுப்ரமணியன் - prakasan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
மேலும்...
கருத்துகள்

மேலே