சிட்டுக்குருவி

#சிட்டுக்குருவி

அது ஒரு மாலை பொழுது தாத்தா ரகு, தன் பேத்தி கலாவை அழைக்க ஸ்கூட்டியில், ஸ்கூல் நோக்கி சென்று கொண்டு இருந்தார்...

மணி 4, பள்ளி மணி ஒலித்தது, அனைத்து குழந்தைகளும் எண்ணிலடங்கா ஒரு மகிழ்ச்சியுடன், அது அவர்களின் முகத்திலே பூத்து குலுங்கியது...பள்ளியின் வாயிலை நோக்கி வேகமா ஓடோடி வந்து நித்தம் அவர் தம் வீடுகளுக்கு புறப்பட்டனர்..

தாத்தா ரகுவின் கண்கள் கலாவை தேடியது..நேரமாகியும் வராததால் சின்ன ஒரு பதட்டத்துடன் இருந்தார்...நேரம் செல்ல செல்ல அந்த அழகு பதுமை ஒரு பெருஞ்சுமையை தன் முதுகில் சுமந்து கொண்டு ஒரு ஆழ்ந்த சிந்தனையோடு வந்து கொண்டு இருந்தாள்... கலா சீக்கிரம் வா மா..நேரமாச்சு...என்றார் தாத்தா..அது அவளின் காதில் விழவில்லை... கலா, கலா என இருமுறை கூப்பிட்ட உடன் தான் அவள் பார்த்தாள்.. தாத்தா என்ன கத்திக்கொண்டு அவரின் மேல் வந்து தாவினாள்...

ஏம்மா லேட் எங்க போன, இல்ல தாத்தா அது வந்து எங்க மிஸ் ஒரு ரைம்ஸ் சொன்னங்கா..அது ஒரு பேர்ட்ஸ் ரைம்ஸ் தாத்தா..ரொம்ப சூப்பரா இருந்துச்சு..அப்படியாம்மா..எங்க சொல்லு பாப்போம்.. அது தாத்தா...என்று இழுத்தவள்...என்னமா மறந்து போய்ட்டா விடு வீட்டுக்கு போய் படிக்கலாம்.. என்றார் தாத்தா..சரிம்மா அது என்ன பேர்ட்னு தாத்தாட்ட சொல்லவே இல்ல..அதுவா தாத்தா அது வந்து ஏதோ குருவி...ஹ்ம்ம் ...அது வந்து..அது வந்து சிட்டுக்குருவி தாத்தா என்றாள் கலா...

தாத்தா ஸ்கூட்டியின் முன் கொஞ்ச இடத்தில் கலாவை உட்கார வைத்து தன் வீடு நோக்கி புறப்பட்டார்..கலா வழி முழுதும் சிட்டுக்குருவியை பற்றியே தாத்தாவிடம் கேட்டு கொண்டு வந்தாள்.. தாத்தா மிஸ் சொன்னாங்க சிட்டுக்குருவி மரத்துல இருக்குமாம்..அது ரொம்ப அழகா இருக்குமாம், சூப்பரா கீச்,கீச் னு கத்தும்மா.. என சொல்லி கொண்டே வந்தாள்.. "வெரி குட்", கலா நிறைய விஷயம் கத்துகிட்டயே...வெரி குட் என தாத்தா பாராட்டினார்..

மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும் அவர்களின் வீட்டிற்கு, அங்கே ஒரே துர்நாற்றம் , கோழி, ஆடு போன்றவற்றின் மலக்குடல், தோல் மற்றும் தேவை இல்லாத இதர பாகங்களை இங்கேதான் கொட்டுவார்கள்.. அங்கே எப்பொழுதும் கழுகு, பருந்து போன்றவை வட்டமிடும்...

அதை கவனித்த கலா தாத்தா இது தான் சிட்டுக்குறிவியா ரொம்ப பெருசா இருக்கு, மிஸ் சின்னதா இருக்கும்னு சொன்னாங்க..அது சிட்டுக்குருவி இல்லாம கலா அது வந்து பருந்து..ஓ அப்படியா என்றாள் கலா...ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும்...

கலா நீ போய், கை கால் முகமெல்லாம் கழுவிட்டு வா..தாத்தா உனக்கு பால் சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்..அது இருக்கட்டும் தாத்தா..நீங்க சிட்டுக்குருவியை பாத்து இருக்கீங்களா..ஹ்ம்ம்..நிறைய பார்த்து இருக்கன்..என் வயசில ஆனால், இப்போ அவ்வளவா அது எங்கேயும் இல்ல..கடைசியா பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு.. இதற்கெல்லாம் காரணம் சுற்றுசூழல் மாசுபாடும், காடுகள் அழிக்கப்படுவதும் தான் என்றார் தாத்தா.. நான்சிட்டு குருவியை பார்த்ததே இல்ல தாத்தா நான் பார்க்கணும் என்று அடம் பிடித்தாள்...கலா...

சரிம்மா போலாம்..போய் பாக்கலாம் நீ போய் ட்ரெஸ் போட்டு வா..பால் குடிச்சிட்டு போலாம்..ஓகே வா..சிறிது நேரத்தில் கலா தயாரானாள்.. தாத்தா..
தாத்தா என்று கூச்சலிட்டாள்..இதோ வரம்மா..பாலை கொஞ்சம் மட்டும் குடித்திவிட்டு வாசலை நோக்கி ஓடினாள்..தாத்தா வாங்க சீக்கிரம் வாங்க...

தாத்தா ரகு.. என்ன இவ இப்படி அடம் பிடிக்கிறா...நான் எங்க போய் சிட்டுக்குருவியை காமிப்பேன்.. இங்க மரத்தை தேடுறத பெரிய கஷ்டம்..நான் குருவியை எங்க போய் தேடுவேன்..என்று தாத்தா புலம்பி கொண்டே வீட்டை பூட்டினார்... தாத்தா வாங்க சீக்கிரம்..இரும்மா வந்துட்டேன்..ஸ்கூட்டியில் அவளை ஏற்றி கொண்டு ஒரு தனியார் பூங்கா ஒன்றிற்கு சென்றார்..அங்கேயாவது கொஞ்சமா மரம் இருக்கும் போய் பாப்போம்..என்று சென்றார்..கலா துள்ளி குதித்து ஓடினாள் பூங்காவினுள்.. பாத்துமா கலா மெதுவா..விழுந்து விடாத என்றார் தாத்தா...மணி 5.30 யை நெருங்கியது..பூங்காவினுள் உள்ள அனைத்து மரத்தையும் பார்த்தாச்சு எதிலும் சிட்டு குருவி இல்ல..சில காகங்கள் மட்டுமே இருந்தது...என்ன தாத்தா இருக்கும்னு சொன்னிங்க ஒண்ணுமே இல்ல போங்க தாத்தா நீங்க பொய் சொல்றிங்க..என்று அடம் பிடித்தாள் கலா...

இல்லம்மா, இப்போ லேட் ஆயிடுச்சு குருவிலாம் தூங்க போய் இருக்கோம்.. நாம நாளைக்கு பாப்போம்னு சமாதானம் படுத்தினாள் தாத்தா ரகு..
அம்மாவும்,அப்பாவும் வர லேட்டாகும் நாம இப்போ ஹோட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்கு போவோம் ஓகே வா..என்றார் தாத்தா...அப்போதும் அவள் அடம் பிடித்தாள்.. சரி தாத்தா உனக்கு நாளைக்கு கண்டிப்பா காமிப்பேன் ஓகே வா..சரி, தாத்தா..நாளைக்கு கண்டிப்பா..
என்றாள் கலா...

நாம சிட்டுக்குருவிய எங்க போய் கண்டுபுடிக்கிறது..என்று ரொம்ப வேதனை பட்டு கொண்டார் தாத்தா ரகு.. சரி பார்த்துக்கொள்ளலாம்..என்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு சென்றனர்..கலாவிற்கு அதற்குள்ளே தூக்கம் சொக்கியது..அவளை கட்டிலில் படுக்க போட்டு விட்டு போர்த்தி விட்டார்..தாத்தா...நாளைக்கு கண்டிப்பா மறந்துட கூடாது..ஓகே வா..ப்ராமிஸ்.. ஓகே ப்ராமிஸ்...என்றார் தாத்தா..ரகு..

போய் கலாவின் டைரியை எடுத்து அவளின் ஹோம் வோர்க்கை எழுதினார்..பின்னர், அந்த சிட்டுக்குருவி ரைம்ஸ் எங்கே உள்ளது என பார்த்தார்..அதில் எந்த ஒரு படமும் போடவில்லை...நாம் எப்படி சிட்டுக்குருவியை காமிப்போம் என்று ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினார்.. தாத்தா ரகு...

தன் பால்ய சிநேகிதர், ராம் என்பவர் நினைவுக்கு வரவே அவரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டார்... ராம் ஒரு சமூக ஆர்வலர், நல்ல பணியில் இருக்கும் போதே அதை வெறுத்து விட்டு தன்னுடைய கிராமத்தில் குடியேறினார்..தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார்... வருமானம் குறைவு தான் என்றாலும் மன நிறைவுடன் வாழ்கிறார்...ஹலோ, ராம் நான் ரகு பேசுறேன், தெரியுது சொல்லுப்பா எப்படி இருக்க..பார்த்து ரொம்ப நாள் ஆச்சே..கடைசியா அந்த மீரா பாய் பேரன் கல்யாணத்துல பாத்தது.. எப்படி இருக்க வீட்ல பையன், மருமக எல்லாம் நலமா...பேத்தியா, பேறனா எப்படி இருக்கா..பேத்தி தான் பா..அதான் ஒரு பிரச்சனை போன் போட்டேன்..ஏன் என்னாச்சு அது அவளுக்கு சிட்டு குருவியை பாக்கணுமாம் அதான்... உன் கிராமத்துல இருக்கா..என்ன ரகு சிட்டு குருவியா நல்லா கேக்குற.."அதான் இந்த பாழப்போன விஞ்ஞானம் எல்லாத்தையும் அழுச்சிடுச்சே"..செல் போன் டவர் வெளியிடுகிற "கதிர் வீச்சு" அதிகமா இருக்கிறது நால எல்லாம் சிட்டு குருவியையும் காவு வாங்கிடுச்சே.. அது போததனு நாம வேர இருக்குற காட்ட எல்லாம் அழிச்சு,
பெரிய பெரிய பில்டிங் கட்டிட்டோம்.. அது எங்கே ரகு இருக்கோம்.. நீயே யோசித்து பார், நீயே இத்தனை நாளாய் இல்லாமல் சிட்டு குருவியை தேடுற.. அது உன் பேதிக்காக அது உன் சுயநலத் திற்காக..அதே போல் அனைவரும் அவரவர் சுயநலத்திற்காக இருந்ததால் இன்று இயற்கை நம்மிடம் இல்லை.. ரகு ஒன்னு பூரிஞ்சுக்கோ சிட்டுக்குருவி மட்டுமில்லை இன்னும் பல உயிரினங்கள் பூமியிலே இருந்ததுக்கான தடையமே இல்ல... நீ எப்போ போய் சிட்டுக்குருவியை தேடுற நீ ரொம்ப லேட் ரகு..என்றார் சிரிப்புடன் ராம்..

ஓகே, ராம் இப்போ நான் கிராமத்துல போய் பாக்கவா.. இல்ல ரகு, அது டைம் வேஸ்ட்..நீ இப்பஎன்ன பண்றனு, ராம் ஒரு ஐடியா கொடுத்தார்...அதுவும் ரகுவுக்கு சரியாய் பட்டது..இரவு பொழுது ஓடோடி கொண்டிருக்க மணி இரவு 10 ஆகியது...வாசலில் கார் சத்தம் கேட்டது...போய் கதவை திறந்தார்.. மகனும்,மருமகளும் என்ன பா சாப்டிங்களா.. சாப்பிட்டேன் பா..கலா... ஹ்ம்ம்..."மாமா,கலா எங்கே..?அவ தூங்கிட்டமா..."ஓ அப்படியா...நீங்க சாப்டிங்களா...என்றார் தாத்தா ரகு... சாப்பிட்டோம் மாமா போர் மீட்டிங் அதான் லேட் ஆயிடுச்சு...ஹ்ம்ம் அதனால என்னமா போய் படுங்க லேட் ஆகுது..போங்க என்றார் தாத்தா ரகு...

புரண்டு,புரண்டு படுத்தார் தாத்தா தூக்கம் வந்த பாடில்லை... நண்பர் ராம் சொன்ன வார்த்தைகள் அவர் மனதிலே ஒலித்து கொண்டே இருந்தது...நான் சுயநலவதிகா இத்தனை நாளாய் இருந்துட்டேன்...சிட்டுக்குருவி சாக நானும் ஒரு காரணமாய் இருந்துட்டேன்..என மன வறுத்தப்பட்டார்.. இதன் மூலம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்...அப்போது மணி எத்தனை என்று கூட தெரியவில்லை...சரியாக காலை 4.30 அலாரம் வைத்து எழுந்தார்...குளித்துவிட்டு தேவையான வற்றை எடுத்து கிளம்ப 5.30 மணி ஆகிவிட்டது...

கீழே மருமகள் எங்க மாமா காலைலேயே, இல்லம்மா நா..நம்ம கிராமம் வரையும் போறேன்..ஒரு வேலையா...ஈவினிங் வந்துடுவேன்..ஓகே வா..காஃபி போடறேன் மாமா.. இல்ல வேணாமா...நான் வெளிய சாப்பிட்டுகிறேன்... கலாட்ட நான் ஈவினிங் வந்து வெளிய அழைச்சிட்டு போறேன்னு சொல்லுமா...நான் போய் கலாவை பிக் அப் பண்ணிக்குறேன்..ஓகே வா...சரிம்மா நா வரேன்...என்று புறப்பட்டார் தாத்தா ரகு...

இரண்டு பஸ்கள் மாரி, 2 மணி நேர பயணத்திற்கு பின் தன் கிராமத்தை அடைந்தார்...பூர்வீக சொத்தாக ஒரு மந்தோப்பு கொஞ்சமா அர ஏக்கர் நிலம் அங்க கிடக்கு...அரவணைப்பு, பாதுகாப்பு இல்லாம...கிடந்தது...முன்னப்போல் பொலிவாக இல்லை, பாதி மரங்கள் பட்டு போய் கிடைந்துச்சு, மீதி வெட்டப்பட்டு இருந்துச்சு...அர ஏக்கர் நிலம் புல்லா கருவேல மரம் மண்டி போய் இருந்துச்சு...என்ன செய்வது என்று அறியாமல் நின்று கொண்டு இருந்தார்... தாத்தா ரகு...

அப்பொழுது, பைக்கில் சென்ற ஒருவர் யாருப்பா அது ரகு ஐயாவா, என்னயா இந்த பக்கம் , பாத்து ரொம்ப நாள் ஆச்சு என்றார் ஒருவர்...யார் என்று தெரியாமல் தாத்தா ரகு ...குழம்பினார்... என்னய்யா என்ன தெரியலையா நான் தான் சாமி... சுந்தரம் பையன்...அடே.. சுந்தரம் பையனா அடையாளம் தெரியல... (சுந்தரம் ரகு வீட்டின் பண்ணையாள்)ஆமா, அப்பா எங்க, ஐயா, அப்பா தவறி ஒரு வருஷம் ஆச்சு ஐயா..அப்படியா சாரி பா..என்னாச்சு எனக்கு தெரியாதே... இல்ல ஐயா திடீர்னு நெஞ்சு வலி போயிட்டாரு...என்றான் சாமி...

சரிப்பா சாமி, இது நம்ம இடம் தான்... தெரியும் ஐயா... நீ என்ன பண்ற இதை சுத்தி வேலி கட்டி இதை பாத்துக்கோ.. புதுசா கண்ணு வாங்கி வை.. அர ஏக்கர் நிலம் கிழக்கே கிடக்கு அதுல விவசாயம் பண்ணிக்கோ...நா அப்பப்ப வரேன்..காசு பணம் தேவையான எனக்கு போன் பண்ணு, இதான் என் நம்பர்..என்று கொடுத்தார் ரகு.. இதுக்கு கை மாறா நீ இதை எப்பவும் பசுமையா வச்சுக்கணும்.. பல பறவைகள் இங்கு வந்து தங்கனும்...நீ பாத்துக்கோ... என்று கூறிவிட்டு கிளம்பினார் ரகு போகும் முன்..2000 ரூபாய் பணத்தை சாமியிடம் கொடுத்தார்...சாமி தென்னங்கன், மாங்கன் போன்றவற்றை கொடுத்தான்..தாத்தா ரகு ஒரு மன நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினார்... மீண்டும் நகரத்தை அடைந்தார்...வீட்டிற்கு போகும் முன் ஒரு விளையாட்டு பொம்மைகள் விற்கும் கடைக்கு சென்று சிலவற்றை வாங்கி கொண்டு சென்றார்...

மாலை 4 மணி ஆனது, வழக்கம் போல் கலாவை அழைக்க சென்றார்...தாத்தா ரகு... கலா தாத்தாவை பார்த்து ஓடோடி வந்தாள்.. தாத்தா..தாத்தா... சிட்டுக்குருவி காமிங்க அழைச்சிட்டு போங்க என்று அடம் பிடித்தால்...

கலா, நம்ம வீட்டுல சிட்டுக்குருவி வந்து இருக்கு போய் பாப்போமா... என்றார்..தாத்தா...கலா சந்தோசத்தில் துள்ளி குதித்தால்...தாத்தாவும், பேத்தியும் வீட்டிற்கு வந்தனர்... தாத்தா ரகு ஒரு அட்டை பெட்டியை காலவிடம் கொடுத்தார், அதனை பிரித்த போது அதனுள்ளே ஒரு பொம்மை சிட்டுக்குருவி, சுவிட்ச் போட்டால் சிட்டுக்குருவி போல் அது கத்தியது... அதை பார்த்து பூரித்து போனாள் அவள்...முகம் முழுவதும் பூரிப்பு... தாத்தா இதான் சிட்டுக்குருவியா (இது தான் ராமின் ஐடியா) இது, நிஜம் இல்லையே தாத்தா...ஆமா ,கலா நான் உன்ன வேகேஷன் அப்ப ஊருக்கு கூட்டிட்டு போய் காமிக்கிறேன்... அது வரைக்கும் இதை வச்சிக்கோ ஓகே வா...ஓகே தாத்தா... தேன்கியூ சோ மச் தாத்தா...லவ் யு என்று முத்தமிட்டாள்...கலா...

கலா பொம்மை சிட்டுக்குருவி உடன் விளையாட, சாமி கொடுத்த கன்றுகளை தன் வீட்டு கொள்ளையில் வைத்து தண்ணீர் ஊற்றி கொண்டு இருந்தார்...தாத்தா ரகு... இனிமேல்... நம்மால் முடிந்தவரை மரத்தை வளர்ப்போம்...நம் கடமையை சரியாக செய்வோம் பல்வேறு மரக்கன்றுகளை வாங்கி நட்டு பராமரித்து வந்தார்...தாத்தா ரகு... இனிமேலும் எந்த ஒரு உயிரும் அழியக்கூடாது என்று தன் வேலைகளை பார்த்தார்..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (28-Mar-18, 5:14 pm)
Tanglish : sittukkuruvi
பார்வை : 589

மேலே