தீரா வறுமை

ஏடு எடுத்து படித்து
நாளேடுகளில் வர
வேண்டிய நாளைய சமுதாயம்
சூழ் கொள்ளும்
வறுமைக்காக வருந்தி படிக்க
வாய்ப்பு இருந்தும்
வாய்ப்பு இழந்த மனதிற்குள்
புழுங்கிக் கொண்டே
புழுதியில் செங்கல் சூளையிலும்
கேள்விக்கு கையுயர்த்தி
தான் வாழ்வு உயருமென்றவர்
எண்ணம் எல்லா
கல்லுயரத் தூக்கி பிழைப்பைத்
தோடிக் கொள்கிறது.......!

எழுதியவர் : விஷ்ணு (28-Mar-18, 6:04 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : theeraa varumai
பார்வை : 89

மேலே