அழகு

"டேய்..தருண்.. நேத்து போய் பொண்ணு பார்த்துட்டு வந்தோமே...பொண்ணு பிடிச்சு இருக்கா? புரோக்கர் கால் பண்ணுவாரு...அவருக்கு பதில் சொல்லனும்டா..." என்றாள் தாய் ஈஸ்வரி...
"அம்மா அது பொண்ணாம்மா... கன்ரங்கரேல்னு...." என்றான் தருண்.
"வாழ்க்கைய நல்லா வாழ நிறம் முக்கியம் இல்லடா... குணம்தான் முக்கியம்.... அந்த பொண்ணு நல்ல குணவதியா தெரியுறாடா...அவள கல்யாணம் பண்ணிகிட்டா உன் வாழ்க்க நல்லா இருக்கும்டா..." என்றாள் அம்மா...
"அம்மா தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ... கல்யாணத்துக்கப்புறம் பத்து பேர்கிட்ட இவதான் என் ஒய்ப்ன்னு இன்ட்ரொடியூஸ் பண்ண வேண்டியது வரும்... அந்த பொண்ணு நல்லாவே இல்லம்மா...என் பொண்டாட்டி அழகா இந்தாதான் எனக்கு பெருமையா இருக்கும்..." என்றான் தருண்.
"எதுடா அழகு? வெள்ளையா இருந்தா அழகா? பெரும படுற விஷயம் நிறத்துல இல்லடா நல்ல குணத்துல இருக்கு....உலக வரலாற்ற புரட்டிப் பார்... கறுப்பா இருக்குற எத்தன பேர் பேரழகின்னு பட்டம் வாங்கி இருக்காங்கன்னு... ஐ சப்போர்ட் ஜல்லிகட்டு...ஐ சப்போர்ட் அக்ரிகல்சர்... சேவ் பார்மர்ஸ்...நான் தமிழன்... நான் திராவிடன்... பேஸ் புக்லேயும் வாட்ஸ்அப்லேயும் மெசேஜ் போட்டா பத்தாது.... திராவிட இன மக்களின் நிறம் கருப்பு... இதனை உணர்ந்து என் தமிழ் இளைஞன் ஒருநாள் கறுப்பு நிற பெண்களை தேடி பெருமை கொள்வான்...அன்னைக்கு நீ எல்லாம் தலைக்குனிஞ்சு நிப்ப..." என தன் மகனிடம் கூறிவிட்டு அகன்றாள் ஈஸ்வரி....
தருணின் மனதில் ஏதோ ஒரு சுமை அழுத்தியது...
- தேவி நரேஷ்குமார்....

எழுதியவர் : தேவி நரேஷ்குமார் (29-Mar-18, 12:07 pm)
சேர்த்தது : தேவி நரேஷ்குமார்
Tanglish : alagu
பார்வை : 268

மேலே