ஒரு பக்க கதைகள் 5

அன்று ஒரு நாள் ஒரு வேட்டைக்காரன் தன் வில்களை தயார் செய்து கொண்டிருந்தான்.அவன் மகனும் அவனோடு இருந்தான்.அப்பா நீங்கள் ஏன் வேட்டையாட போறீங்க ?என கேட்டான்.அதற்கு வேட்டைகாரனும் நம்ம தொழில் அதுதான்.வேட்டையாடி விலங்குகளின் பாகங்களை விற்று தான் நாம் வாழ்கிறோம்.நம் முன்னோறும் வேட்டை ஆடிதான் தங்கள் வாழ்க்கையை நடத்தினர் என்று கூறினார்.உடனே அவன் மகனோ அப்பா நானும் வரேன்ப்பா.எனக்கு நீங்க வேட்டை ஆடுவதை பார்க்கனும் போல இருக்குனு சொன்னான்.உடனே அப்பா சரி வா போகலாம்னு அழைத்து கொண்டு காட்டிற்குள் சென்றனர்.வெகு தொலைவு நடந்து கலைத்து போய் உட்கார்ந்து விட்டான். எழுந்து வா இங்கே உட்கார கூடாது பா... என கூறி கொண்டே சாப்பிட பழங்களையும், தண்ணீரையும் கொடுத்தார்.புதரிலிருந்து முயல் ஒன்று எட்டி பார்த்தது.உடனே வேட்டைக்காரன் முயலை உயிருடன் பிடித்தான்.அப்பா இது அழகா இருக்கு.நான் வைத்து கொள்ளலாம்? என் கேட்டான்.சரி என இருவரும் வீடு திரும்பினார்கள்.பல காலங்கள் கழிந்தது.முயலோடு வளர்ந்தான் மகன் . அப்போது வேட்டைகாரனும், மகனும் பேசி கொண்டனர்.அப்பா நாம் ஏன் வேட்டையாட வேண்டும்."அதுவும் உயிர்கள் தானே."
நம்மை போல் தானே.த தவறை உணர்ந்தான் வேட்டைக்காரன்.
"உயிர்கள் என்பவை இறைவன் கொடுத்தது.பிற உயிருக்கு எந்நிலையிலும் தீமை இழைக்க கூடாது.தன் குழந்தைகளை, தன் உறவுகளை போல அதையும் நேசிக்கும்."
""அனைத்து உயிர்களையும் நேசிக்க பழகுங்கள்."

எழுதியவர் : உமா மணி படைப்பு (29-Mar-18, 1:28 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 192

மேலே