ராஜி மேடம்

இரண்டு நாள் என் விடுமுறைக்குப் பிறகு நான் பணிபுரியும் வங்கியில் எப்போதும் இல்லாத அந்த அமைதி எனக்கு வித்தியாசமாகப் பட்டது . நான் கேசியராக இருப்பதால் பெரும்பாலும் வேலைக்குள் மூழ்கி விட்டால் காலையில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட ஞாபகத்திற்கு வராது .
கேஸ் கவுண்டர் நடைமுறைப்படி யார் தாற்காலிகமாக வந்து போகிறார்களோ அவர்கள் பெயரோடு ஒரு சின்ன சீட்டு எழுதி கேஸ் ட்ராவுக்குள் வைத்து விடுவோம்.என் விடுமுறை நாளில் யார் கேசியராக சீனியர் ராஜி மேடம்தான் இரண்டு நாளாக இந்த இடத்தில் இருந்திருக்கிறார்கள் .
ராஜி மேடம் கிளியரிங் செக்சன்.
நான் ஏழு ஆண்டுக்கும் முன் இந்த தனியார் வங்கிக்குள் இண்டர்வியூ முடித்து வந்த போது இந்த செக்சனில் எப்படி வேலை பார்க்க வேண்டும் என்று பாடம் எடுத்தவர் ராஜி மேடம்தான்.வேலையில் மிக சின்சியர் பெர்சன்.
புதிதாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில் நமக்கு அமையும் சீனியர் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் அந்த இடம் சொரக்கம்தான்.
சின்மயானந்தர் சொல்வது போல கடினமாக வேலை பார்ப்பதை விட கவனமாக வேலை பார்க்கத் தெரிந்தவனே வேலைக்கு தகுதி பெறுகிறான் என்பதை சரியாக சொல்லித் தரத்தெரிந்தவர் ராஜி மேடம் மட்டும்தான். அதிலும் செய்யும் தொழிலை காதலோடு செய்ய வேண்டும் என்பதில் அலாதி கவனம் செலுத்துவார்கள் .
அப்படிக் கற்று கொண்டதனால்தான் இன்று வரை ரிமார்க் இல்லாமல் என் வண்டி ஓடுகிறது. அதுவும் தனியார் வங்கிகளில் கொடுக்கும் சம்பளத்திற்கு பிழிந்து காயப்போட்டு விடுவார்கள் .ஏதாவது சிறு தவறைக் கூட சரியாக இன்கிரிமெண்ட்டில் காட்டி விடுவார்கள் .

பதினோறு மணிக்கு டீ கொண்டுவந்து ஆஃபிஸ் ஹவுஸ் கீப்பர் ராமாத்தாள் அம்மா கொடுத்தார்கள் . கேஸ் கவுண்டர்களில் இருப்பவர்களுக்கு டீ டைம் உள்ளேதான். டீ குடிக்கும்போது பார்த்தேன் இன்னும் ராஜி மேடம் வரவில்லை என்பது தெரிந்தது.
டீ டம்ளரை எடுக்க வந்த ராமாத்தாள் அம்மாவிடம் கேட்டேன் .
ராஜி பண்ணிரெண்டு மணிக்குத்தான் வரும். உனக்குத் தெரியாதா தம்பி என்றார்.
ஒருவேளை பெர்மிசனா என்று கேட்க தோணியது .ஆனால் கேட்கவில்லை.

மணி பண்ணிரெண்டுக்கு மேல் ஆகியும் ராஜி மேடம் இருக்கை காலியாகவே கிடந்தது .
நான் கவனித்ததை ரெண்டு கேபின் தள்ளி முருகேசன் லோன் செக்சனிலிருந்து கவனித்து விட்டு இண்டர்காமில் அழைத்தார்.
என்ன உங்க ஆளைத்தேடறியா ? என்று கேட்டார் .
நான் பதில் பேசவில்லை .அவரும் அப்படித்தான் பேசுவார் ஆனால் மிக நல்ல மனிதர்.
இப்பத்தான் நான் மேனேஜர் ரூமிற்குள் போனபோது ராஜிக்கிட்ட இருந்து போன் வந்தது .ரிசைன் பண்ணுதாம் அந்தம்மா என்றார் .

எனக்கு கேட்டவுடன் தூக்கிவாரிபோட்டது .
இந்த வங்கியில் மொத்தம் பதினாறு பேர் இருக்கிறோம்.அதில் நாழ்வர் மட்டும்தான் பெண்கள் .ஆனால் ராஜி மேடம் சாப்பிடக் கூட பெண்களோடு சேர்ந்து போக மாட்டார் . காரணம் கேட்டதற்கு வேலை பார்க்கும் இடத்தில் எப்ப பார்த்தாலும் புடவை ,வீடு,பணம் ,புருசன் என்று சதா பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது என்றார்.

இதை எதேச்சையாய் சீனியர் மேனேஜர் ரங்கராஜிடம் சொன்னபோது ,
அதுல கடைசி சொல்றேல்ல அதுதான் அந்தமாவுக்கு பிரச்சனை .
புருசன். அது டைவர்ஸ் கேஸ் என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டினார்.
அவரைப்பற்றியும் அலுவலத்தில் வேறு பல கிளைக்கதைகள் ஓடிக்கொண்டு இருப்பது வேறு விசயம்.
என்னை பொறுத்தவரை சொந்த வீட்டில் நல்லா சாப்பிடுபவனும் நல்ல செக்ஸை அனுபவிப்பனும் வெளியே சொல்லுவதில்லை .பிரச்சனையுள்ளவர்கள்தான் அடுத்த வீட்டு டைனிங் டேபிள் மேலும் பெட்ரூமிற்குள்ளும் எட்டிப்பார்ப்பார்கள் .
நடந்தது இதுதான்.
ராஜி மேடம் எப்போதும் உடை அணிவதில் தனியாகத் தெரிவார்கள் .ஆனால் அவர்கள் உடை எப்போதும் விமர்சிக்கப்படுவதில் தப்பாது.எங்களோடு கூடவே பணிபுரிபவரியும் பெண்கள் கூட ராஜி மேடத்தின் உடை விமர்சனத்தை விட்டு வைப்பதில்லை .
ஒருமுறை லோன் முருகேசன் சார்தான் என்னிடம் ஏம்பா இதெல்லாம் அந்தம்மாகிட்ட சொல்லக் கூடாதா என்று கேட்டார்.
எனக்கு எப்போதும் பழகியவர்களிடம் குறை கண்டுபிடித்து பழக்கமில்லை என்று சொன்னதற்கு அவரும் ஆமோதித்தார் .
அதிலும் ராஜி மேடம் என்னை போல ஆஃபிசில் பலருக்கும் சீனியர் .வேறு யாரோ ஒருமுறை இப்படி கேட்டதற்கு ,என் கழுத்துக்கு மேல் கண்ணைப்பார்த்து பேசும் யாராவது இதை சொல்லட்டும் மாற்றிக்கொள்கிறேன் என்று பதில் சொல்லி விட்டார்களாம்.
இதைக் கேட்டு முதலில் கொதித்தவர் சீனியர் ரங்கராஜ் சார்தானாம் .
எல்லாரும் என்னமோ ராவணன் மாதிரியே ட்ரீட் பண்றாளே அந்தம்மா என்றாராம்.

அந்த கோபத்தை சேர்த்து வைத்துதானோ என்னவோ நான் ஆஃபிஸிற்கு லீவு போட்டு இருந்தபோது அணிந்து வந்த லெக்கின்ஸ் பற்றி மனிதர் பேசப் போய் அது, இன்னொரு பெண் அலுவலர் மூலம் ராஜி மேடத்திற்கு போய் கேஸ் கவுண்டரை மூடிவிட்டு வந்து நிறைய மக்கள் இருக்கும் போது உங்களுக்கு என்ன சார் பிரச்சனை என்று நேரடியாக கேட்கப் போய் ,அவர் ஆஃபிஸ் வருவதைப் போலவா வருகிறாய் என்று கேட்க ,நீங்க ஆஃபிஸிற்க்கு வந்தீங்கண்ணா அந்த வேலை மட்டும் பாருங்க எவ எப்படி வற்றான்னு பார்க்காதிங்கன்னு ராஜி மேடம் கத்த , நிறைய மக்கள் கூட்டம் தன்னை வேடிக்கும் போது தான் அவமானப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத ரங்கராஜ் சார் ,
உன்னையெல்லாம் பிராத்தல் கேஸ்ல புக்கானால்தான் அறிவு வரும் என்று கூசாமல் வெகு நாள் ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார் மனுசன் .
__________________________
நான் உங்களை பார்க்க வருகிறேன் என்று மொபைலில் கேட்டபோது சில செகண்ட் மௌனத்திற்கு பிறகுதான் ஒத்துக்கொண்டார்கள்
ராஜி மேடம் வீடடைக் தேடிக்கண்டு பிடிப்பதில் எனக்கு மிகச் சிரமமாய் இல்லை .
அவர்கள் வாசலில் நின்று இருந்தார்கள்.
நிறைய அழுதிருப்பார்கள் போல !
வீடு ரொம்ப சிம்பிளாக இருந்தது .
என்ன சாப்பிடற என்று கேட்டார்.
உங்கள் இஷ்டம் என்றேன் .
தினப்படி ட்ரெஸ் பண்ணும் விசயத்திற்குள் இவ்வளவு பிரச்சனை உள்ளடங்கியிருக்கிறதா? என்னதான் திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகியிருந்தாலும் என் மனைவியிடம் கூட நான் கவனிக்காத விசயங்கள் நிரம்ப இருக்கிறது .
பெண்கள் உடுத்திக்கொள்ளும் உடைக்கும் அவர்கள் மனசுக்கும் அப்படி ஒரு பந்தம் இருப்பது அவர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன்
ராஜி மேடத்தின் டைவர்ஸ்க்கே உடைதான் காரணம் என்று சொன்ன போதுதான் எனக்கு சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.
நான் சென்னையில படிச்சதால மாடெர்ன் ட்ரெஸ் ஒரு மேட்டராவே தெரியல .மாடர்னா ட்ரெஸ் பண்ணினா உடனே கேஸ்ன்னு முத்திரைக் குத்துவாங்கன்னு எனக்குத் தெரியாது .
கணவன் சந்தேகப் பிராணியாம் .இன்னொரு ரங்கராஜ் சார் மாதிரியாம் .அதுனால யார் உடை பற்றிப் பேசினாலும் எங்கிருந்து கோவம் வருகிறது ஏன் என்றே தெரியாது என்றவர்,
நீயும் ஆம்பளைதான் இருந்தாலும் சொன்னாக் கோவிச்சுக்காத யோகா நிறைய ஆம்பளைகளுக்குப் பொம்பளைங்கள கண்டா ஏதாவது அடக்கி வைக்கனும்ன்னு உள்ளப் பொத்துக்கிட்டு வருது .ஏதாவது சாக்கு இருக்கணும் அவ்வளவுதான் .
கல்யாணம் ஆன முத வாரமே என்னோட ஹஸ்பெண்ட் வீட்ல இந்தப் பிரச்சனை தொடங்கியது .அந்தாளுக்குப் பொண்டாட்டி கை நிறையச் சம்பாதிக்கணும் ஆனா அவளுக்குன்னு எதுவுமே இருக்கக் கூடாதுங்கற வளர்ந்துக்கிடே இருந்தது ஒரு கட்டத்துல எல்லை மீறி அவங்க வீட்ல சொல்றதைக் கேட்டுக் கை நீட்ட எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.டைவர்ஸ் வரைக்கும் போயிருச்சு.
நான் தினம் தினம் ட்ரெஸ் பண்ணுபோதெல்லாம் என் புருசன் மாதிரி ஆளுகளப் பழிவாங்கற கோபம் கூடிப்போச்சு என் புருசன் மாதிரிக் கண்ணுக்குத் தெரியாத பல ஆம்பளைங்கள் இதன் மூலமாப் பழிவாங்கனும்ங்கிற விரக்தி கூடிப்போச்சு .இது எல்லாப் பொம்பளைகளுக்கும் தோணுமான்னுத் தெரியல .எனக்குத் தோணிச்சு அதனால முன்ன விட ட்ரெஸ் பண்ணுவதில எனக்கு எது புடிக்குமோ அதைப் போட்டுக்க ஆரம்பித்தேன் .
ஏன் யோகா என்ன பார்த்தா உனக்கு ஏதோ லூசு மாதிரி தெரியுதான்னு ? ராஜி மேடம் பேச்சை நிறுத்திக் கேட்க ,
நான் அவசரமாய் மறுத்தேன்.
அப்படி நீ நினைச்சாலும் பரவாயில்லை எனக்கு என்னவோ உன்னிடம் சொல்லனும்ன்னு தோணியது .
______________________
அந்த வாரம் அலுவலகத்தின் ஹைலைட் பேச்சு ராஜி மேடத்தைச் சுற்றியே இருந்தது .
பேசி விட்டு கிளம்பும் போது மணி ஏழரை ஆகியிருந்தது.
வீட்டில் நான் பார்த்த ராஜி மேடத்திற்கும் ஆஃபிசில் பார்த்த மேடத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தது.
அதிலும் இரண்டு பெரும் பிரிவாகப் பேசினார்கள் .
என்னை மாதிரி அவரோடு பேசிப் பழகியவர்கள் அவர்கள் திறமை பற்றிப் பேசினார்கள்.
பழகாதவர்கள் இந்தத் தண்டனை சரியென்றார்கள் .
அது கூட வேறு விசயம் இவர்களோடு சில பெண்களும் ஒத்து ஊதினார்கள் என்பதுதான் அதை விட மோசமானது .
பெண்கள் பணிபுரியும் பல அலுவகத்தில் இப்படித்தான் நடக்கிறது . தன்னோடு பேசிப்பழகினால் ஒரு பெயரும் பேசாவிட்டால் வேறு ஒருபெயரும் வைக்கிறார்கள் !
அந்த வாரம் ஞாயிறுக் கிழமைக் காலை பத்து மணிக்கு என் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஒரு கால் டாக்சிப் புக் செய்து எனக்குத் தெரிந்த அந்தப் பெண்கள் காப்பகத்திற்கு ராஜி மேடத்தை அழைத்துப்போனேன்.

தெரிந்த பல நண்பர்களோடு அந்தப் பெண்கள் காப்பகத்திற்கு நாங்கள் வருடா வருடம் பொருளுதவி செய்வதன் மூலம் எனக்கு அந்தக் காப்பகம் பழக்கமானது. ஏதாவது அவர்கள் மூலம் இப்போதெல்லாம் நம் மூலம் கொடுக்கும் உணவுப் பொருட்களுக்குத் தடை அதிகம் .எங்காவது மீதி ஆகும் சில சமயம் கெட்டுப்போன பொருட்கள் உடல் நலத்தைப் பாதிக்கும் என்பதால் உணவுப் பொருட்களுக்கு அனுமதி கிடையாது .பரிந்துரைக்கப்பட்ட உணவு அட்டவணைப் படி அவர்களே உள்ளிருந்து தயார் செய்து மட்டுமே வழங்க அரசு உத்தரவிட்டிள்ளது அரசு
ராஜி மேடம் இங்கு என்ன வேலை என்று ஒரு பார்வை பார்த்தாலும் அங்கு உள்ள எல்லாப் பெண்களைப்பற்றியும் அந்த காப்பக பொறுப்பாளரிடம் விசாரித்தார்கள் .
கடைசியாக நாங்கள் சென்றது அதில் ஒரு பகுதி மன நல குன்றிய பெண்கள் பகுதி .
ஆண்களுக்கு அதிகம் அனுமதியில்லை என்றாலும் எனக்கு அந்தக் காப்பக உரிமையாளார் பழக்கம் என்பதாலும் நான் இருந்த யோகா அமைப்பின் மரியாதை புரிந்து இருந்ததாலும் அனுமதித்தார்கள் . காரஆன்ம் அங்குள்ள பெண்களுக்குத் தங்கள் உடை பற்றியோ,தனக்கு நடக்கும் மாதாந்திர அவஸ்தைப் பற்றிக் கூடஎதுவும் தெரியாது .அதை விட அவர்களுக்குத் தாங்கள் ஒரு பெண் என்ற உணர்வு கூடக் கிடையாது .யாராவது வந்தால் சிரிப்பார்கள் .சில சமயம் உற்றுப்பார்ப்பார்கள் .எங்காவது நகர்ந்து போய் உட்கார்ந்து கொள்வார்கள் .
அதில் ஒரு பெண் ராஜி மேடத்தை ஓடி வந்து சட்டெனெக் கட்டிக்கொண்டது .
அக்கா நல்லா இருக்கியா ? என்றது .
ராஜி மேடம் கண்களிருந்து அவர்களே அறியாமல் கண்ணீர் வழிவதை என்னால் கவனிக்க முடிந்தது.
நான் சற்று ஒதுங்கி நடந்து மனைவியை மட்டும் ராஜி மேடத்தோடு அனுப்பி விட்டு நான் வெளியே உள்ள கார்டனில் உட்கார்ந்து இருந்தேன் .யாரோ ஒரு பெண் ஓடி வந்து குடிக்கத் தண்ணீர் கொடுத்தது.
சுமார் ஒரு மணி நேரம் போன பின் ராஜி மேடம் என் மனைவியோடு வந்தார்கள்.
அவர்கள் முகம் மிகவும் வெளுத்து இருந்தது .
நிறைய அழுதிருக்க வேண்டும்.

ராஜி மேடம் காரில் திரும்பி வரும் போது எதுவும் பேசவில்லை .காரின் ஜன்னல் வழியே வெளியே ஆழமான சிந்தனையோடே பயணித்தார்கள் அருகில் அமர்ந்திருந்த என மனைவியுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்கள் .
அவர்கள் தங்கியிருந்த லேடிஸ் ஹாஸ்டலில் விட்டு விட்டு நாங்கள் வீடு திரும்பினோம்.
ராஜி மேடம் மாலை மொபைலில் அழைத்தார்கள் .
தேங்ஸ் யோகா என்றார்கள் .
எதற்கு மேடம் என்றேன்
வாழ்க்கையைப் புரிய வைத்ததற்கு என்றார்கள் .
நான் ஒன்றும் பேசவில்லை .
அனேகமாக ராஜி மேடத்தின் மனம் இன்னும் காப்பகத்தை விட்டு வரவில்லை.
சில செகண்டு மௌனத்திற்கு பிறகு அவரே பேசினார்.
யாரோ சில பேர்கள் மீது கோபத்தை வச்சுக்கிட்டு அவர்களைப் பழிவாங்குவதாக நினைச்சுக்கிட்டு என் மொத்த வாழ்க்கையுமே அர்த்தம் இல்லாம வாழ்ந்துட்டேன் யோகா என்றார்கள்.அந்தப் பிள்ளை யாரோ அக்கான்னுக் கட்டிகிட்டு நிற்கும்போது சட்டெனெ எல்லாம் மாறிப்போச்சு யோகா .ஒரு நிமிசம் பயந்துட்டேன் .நான்தானா அங்க போனதுன்னே இப்ப கூட என்னால நம்ப முடியலை .
வார வாரம் அங்குப் போகப் போவதாகவும் தன்னால் இயன்ற பொருளுதவி தருவதாக சொல்லியிருக்கிறேன் என்றார்கள்.
வெகு நேரம் ராஜி மேடம் பேசினார்கள் .
__________________
திங்கள் கிழமை அலுவலகப் பணிக்குத் திரும்பினார்கள்.
முதலில் அவர்கள் சென்றது சீனியர் ரங்கராஜ் டேபிளுக்கு .
நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
ராஜி மேடத்தின் இந்த மாற்றம் கூடப் பலரால் ஒத்துக்கொள்ள முடியாமல் போகலாம் .
உலகத்தில் சிலருக்கு மாற்றம் கூடப் புரிந்து கொள்ள வெகு நாளாகலாம்.
ஆனால் ராஜி மேடத்தின் மாற்றம் மாறாதது என்பது எனக்குத் தெரியும் .
என்ன இருந்தாலும் எனக்கு அவர்கள் சீனியராச்சே !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி. (30-Mar-18, 11:05 am)
பார்வை : 191

மேலே