நான்

கோபம் எனக்குப் பிடிக்காததும்,
என்னில் மிகப் பிடித்த ஒன்றும்....
என் வார்த்தைகளை புரிந்து
கொள்பவர்களுக்கு என்னை
புரிந்து கொள்வது கடினம்
அல்ல...
மறதியால் நான் பெருமிதம் கொள்கிறேன் ...
மறவாது மரத்துப்போன
இதயமெல்லாம் மரித்து
போகும் மத்தியில், மறதியால்
நான் பெருமிதம் கொள்கிறேன் ...
சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டால்
அதில் சிங்கார நடைபோட்டால்
பல்லெல்லாம் இளிச்சென்றும்
உள்ளம் மட்டும் இகழ்ச்சியென்றும்
வெறும் வார்த்தையால் வாங்க போங்க
என்பதெல்லாம் மரியாதையாம்...
மானம் கெட்ட மடக்கூட்டங்களே,
மண்டியிட்டாலும் தன் மானம்
இழக்காத பலரில் ஒருவன்...
நானாக தான் நான் இருப்பேன்..
அதனால் பலரை இழந்தேன்...
தானாய் சிலரை ஈர்த்தேன்...
ஆனால் ஒருபோதும் என்னை இழக்கவில்லை...
அந்த சிலர் என்றும் என்னோடு..
என்றென்றும் மறியாதையோடு ...

எழுதியவர் : Abu (2-Apr-18, 12:21 pm)
சேர்த்தது : அபு
Tanglish : naan
பார்வை : 184

மேலே