தீய நட்பை அறிதல்

நண்பனாய் வந்தவன்
நட்பில் விடம் பாய்ச்சி
முள்ளாய் என்னை தைத்தபோதுதான்
அவன் நட்பின் கள்ளம் தெரிந்தது
தெரிந்தவுடன் முள்ளை வேரோடு
களைத்துவிட்டேன் ,புரிந்து கொண்டேன்
நட்பை நாடும்போது நல்ல நண்பனை
முதலில் தேடி நாடி அடைதல் வேண்டும் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Apr-18, 2:22 pm)
பார்வை : 184

மேலே