முதன் முதலாய்
நான் பார்த்த
முதல் பேரழகி நீயடி!
நான் படித்த முதல்
கவிதை உன் விழியடி!
நான் கேட்ட முதல்
இசை உன் மொழியடி!
நான் படித்த முதல்
புதினம் உன் இதழடி!
நான் நனைந்த முதல்
மழை உன் புன்னகையடி!
நான் ரசித்த முதல்
அருவி உன் கூந்தலடி!