எனக்கான புள்ளி
அறையெங்கும்
நிறைந்து இருக்கும்
வெப்பத்தில்
மெதுவாக முளைத்து
கொள்கிறது
எனக்கான கேள்விகள்.
பதில்கள்
பெருமூச்சின் மிச்சமென
ஓய்கிறது
அழையா குரலென
கசிகிறது
தோல்விகளின் நீட்சி .
அளவில்லாமல் வளர்ந்து
நீள்கிறது
ரௌத்திர கால்கள்
கேட்கிறது புள்ளியின்
நகுருதல்
என்னை நோக்கி
அறையின் மூலையில்
விரிகிறது
இன்னொரு வெப்பம்