R K சுரேஷ் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவி

நண்பனே
இன்றோ உனக்குப் பிறந்தநாள்
எனக்கோ சிறந்தநாள்
தினகரன் வென்றது ஆர் கே
உன்னை ஈன்றது ஆர் கே
எச் ஓ டி வகுப்பில் பேனா இன்றி
எழுத முடியாது நான் தவித்த தருவாய்
நீதானே மச்சி உன் பேனாவை எனக்குத் தருவாய்
அன்பனே பண்பனே என் ஆருயிர் நண்பனே
மாமழை பொழியும் வானம்
நீ நடந்தால் பூமழை பொழியும்
பூமழை பொழிந்த வானம்
நீ கேட்டால் பா மழை பொழியும்
இதுதான் நீ பெற்ற ஞானம்
பாரதியார் கல்லூரியில்
பயின்ற பாரதியே பா ரதமே
உன்னை ஒருநாள் போற்றும் பாரதமே
குணாளனே
நீ பாரதியார் கல்லூரியின் குணாலே
சூரியனிடமிருந்து சிவப்பையும்
கர்ணனிடமிருந்து பேனாவையும்
அள்ளிக்கொண்டு பிறந்தவனே
தேர்வில் விடைத்தாளை மட்டும்
கொடையளிக்க மறந்தவனே
நீ கால்குலேட்டரில் கணக்குப்போட்ட கணினி
மச்சிகளிடம் கணக்குபோடாமல் பழகிய கனி நீ
நீ அனைவருக்கும் கொடுத்த பூ நட்பூ
சென்னை பெருமை கொண்டது
ஈன்றதால் உன்னை
நீ காரைக் கரையில்
படித்தாலும் உன்னுள் காரையோ கரையோ இல்லை
பல்லாண்டு வாழ்க என் நண்பா
உனக்கு சமர்ப்பணம் இந்த வெண்பா