ஆண் பேய், பெண் பேய்
என் நண்பன் ஒருவன் பேய்களை பற்றி
ஏதேதோ கட்டுக்கதைகள் சொல்லிக்கொண்டிருந்தான்
அதில் ஒன்றில், ஒரு ஆண்பேய் , பெண் பெயின் உரையாடல்
அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான்
இது என்ன கட்டுக் கதை நண்பா
மனிதருக்குதான் ஆண், பெண் என்ற பாகுபாடுண்டு
பேய்களில் எப்படி இந்த பாகுபாடு
அவை வெறும் ஆவிகளின் (உயிர்) உலாவுதல் தானே
என்றேன் -ஆவிகளுக்கு ஏது நண்பா இந்த பாலினம்
ஆவி உலகத்திலாவது உயிர் ஊசலாடாமல் (பெண் ஆவி)
இருக்கவிடு, கதையை அப்படி சற்று மாற்று என்றேன்
ஆவிகள் தேடி அலைவது அமைதி
ஆவிகள் வெறும் மனப்பிராந்தி என்றேன்