அயல் மகரந்தங்கள்
உன் கவிதையை
நீ எழுதுகையில்...
உன்னுள் இவ்வண்ணம்
நிகழ்ந்ததா நீள?
மெள்ள பறத்தல்...
காது மடல்கள்
மென்சூடு கொள்வது.
தியானத்தின் போதை.
உன்னுள் இளகும் நீ.
உயில் எழுதும் கவனம்.
புணர்வில் பெருமூச்சு.
புத்தரின் புன்முறுவல்.
படபடக்கும் வெயில்.
கடுந்தொலைவுக்கும்
அறிந்த பயணவழிகள்.
செவி மலர
குரல் திரளும் துடிப்பு.
கள்வெறி கொண்ட
மூளையின் விரல்களை...
கடலளவு கருணையை...
சொல்லின் சல்லாபம்.
அறிந்து இருந்தால்
உன் கவிதையில் பரவி
புத்துயிர்க்கும் புவனம்.
இதுவற்று பிதுக்கி
எழுதி தள்ளினாலும்
கவிதைதான்-இருப்பினும்...
இருக்கலாம் உனக்கு
ரத்தக்கொதிப்பு.