உயிரின் விலை சிலுவை --- முஹம்மத் ஸர்பான்

கருவறை பிளந்து
சமாதிகள் செய்து
ஆடு மாடு போல்
வதைபடும் தேசம்
தாய்ப்பால் கேட்டு
ஆரி ராரோ பாட்டு
துண்டு துண்டாய்
குப்பையில் மார்பு
தொட்டில் கட்டும்
ஆபாச ஓநாய்கள்
கன்னியின் மானம்
கொத்தித் தின்னும்
நிலவுகள் துயிலும்
கதவுகள் உடைத்து
மாதாவிடாய் நீரை
வெட்டிப் பார்க்கும்
பிஞ்சுமுகம் கண்டு
துப்பாக்கி திருந்தும்
நஞ்சுஅகம் கொலை
செய்ய நினைக்கும்
ஏந்தப்படும் ஆயுதம்
மலடிவரம் கேட்கும்
என்புகளின் அங்காடி
ஐநாக்கள் நடாத்தும்
அகதியான மலர்கள்
தண்ணீரைத் தேடும்
முள்ளிவாயல் ஓடை
பிணங்களால் ஓடும்
அடிமையான தேகம்
இனி உலகின் பேரம்
கழுத் தறுந்த சிரியா
நா வறண்டு சாகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Apr-18, 10:03 am)
பார்வை : 178

மேலே