காவிரி

குடகில் பிறந்து
எங்களின் மகுடமாய் ஆனவளே
மண்ணில் ஈரம் பதித்து
எங்கள் நெஞ்சினிலும் ஈரம் பதிப்பவளே
பல வண்ணங்கள் காணச் செய்திடுவாய்
நீ பல கிளைகளாய் பிரிந்திடுவாய்
எங்கள் வாழ்வு செழிக்க ஓடோடி வரும் காவிரியே
நீ ஓடும் அழகு கண்டு
ஏக்கம் நெஞ்சிலே பிறந்திடுமே
நீ போகும் திசையினிலே
பூமி குளிர்ந்திடுமே
பசுமை பொங்கிடுமே
தாகம் தீர்ந்திடுமே
உயிரினம் காத்திடுமே
தாயே எங்கள் காவிரியே
எங்கள் உழவுக்கு நீ பயனாகிடுவாய்
எங்கள் கவிஞனுக்கு நீ அழகாகிடுவாய்
உனை போற்றி வணங்கிடும்
எங்கள் தெய்வமென ஆகிடுவாய்
எங்கள் சொந்தமானவளே
எங்கள் அன்னையே
நீ சீறி பாய்ந்து வயல்களில்
கொஞ்சி போகும் அழகைக்காணவே
வழி நோக்கி காத்துக்கிடக்கின்றோம்
எங்கள் பூமியில் உம் பாதம் பதிய வருவாயா ?
சூழ்ச்சிகள் உடைத்து வருவாயா
தடைகளை உன் பலம் கொண்டு உடைத்தெரிந்து வா
காவிரியே உனக்காக காத்துக்கிடக்கும் உயிரினங்களுள் ஒன்றாய் கேட்கின்றேன்
வருவாயா ? வருவாய் என்ற நம்பிக்கையுடன் !

எழுதியவர் : பிரகதி (5-Apr-18, 11:35 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : kaaviri
பார்வை : 969

மேலே