தமிழன்டா

பாரெங்கும் பசிபோக்க
வேரூன்றி விவசாயம் செழிக்க
நீர் கேட்டு போராடினோம் ..

தண்ணீர் கேட்டு
மன்றாடிய நம்மை
கண்ணீர் வரவைத்து
மாழச்செய்தது நம் அரசு ..!!

மாசற்று,நோயற்ற வாழ்வு வாழ
மடிப்பிச்சை கேட்டோம்
ஸ்டரிலேட் விரிவாக்கம்
செய்தது நம் அரசு ...!!

ஏழை மாணவனும்
மருத்துவன் ஆக
உயிர் நீத்தாள் -தமிழச்சி
நீட்டை நீக்காமல் மாணாக்கரின் கனவை
நீக்கியது நம் அரசு ...!!

குட்டியது வாங்கிக்கொண்டோம் ,
தட்டியது பொறுத்துக்கொண்டோம் ,
ஏமாற்றியது மண்ணித்து மறந்தோம் ,
வாக்குறுதியை பொய்யாகியது பழகிக்கொண்டோம் ,
இனவெறியை தூண்டியது அமைதி காத்தோம் ..,

மாட்டுக்காக போராடியவன் தானே
எளிதில் ஏமாற்றிவிடலாம்
என எண்ணினாயோ
எம்மை யாழும் அரசே ..??!!

நாங்கள் அமைதியுடன்
தென்படும் அலைகடல் தான்
வெறும் கண் கொண்டு பார்த்தால்......
கொஞ்சம் உள்ளே சென்று பார்
தெரியும் சுனாமியின் உட்சவம் ..!!

நீ அடிக்க அடிக்க
பொறுத்துக்கொள்ளவோம்
என நினைத்தாயோ ???
ஒரு நாள் இல்லை...ஒரு நாள்
பொங்கியெழும்
தமிழன் டா...!!👍

எழுதியவர் : ஜீவன்.. (7-Apr-18, 4:40 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 173

மேலே