தவிக்கிறேன்

ஒரு மான் குட்டி நடு காட்டில் மாட்டிக் கொண்டதை போல தவிக்கிறேனோ... இல்லை ஒரு மீன் குட்டி தண்ணீர் இன்றி துடிப்பதை போல தவிக்கிறேனோ....
உன்னிடம் பேச வேண்டும் என தவிக்கிறேனோ....
இல்லை உன்னிடம் பேச முடியாமல் போனதினால் தவிக்கிறேனோ.... எனக்கொன்றும் விலங்கவில்லை அதை யாரிடமும் என்னால் விளக்க முடியவில்லை..... என் அருகில் நீயும் உன் அருகில் நானும் என்றவாறு நாம் கதை களிக்க ஆயிரம் ஆசை அடி நெஞ்சில் பூத்தாலும் .....நாம் தொலைவில் இருந்தாலும் தொலைபேசி வாயிலாகவாவது நாலு வார்த்தை பேசிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை ஆசையாவது நிறைவேறியதா என்றால் அதுவும் நிறாசையாகிப் போனது.....நான் உன் நினைவிற்குள் சிறைபட்ட நாளில் இருந்தே எரிகின்ற அடுப்பில் வேகின்ற விறகைப் போல் நெருப்புக்குள் அடைபட்டதை போலத்தான் உணர்கிறேன்.......அதிலும் உன்னுடன் பேச முடியாமல் போன நாட்களில் நான் மரணத்தையே உணர்ந்திருக்கிறேன்....ஒரு வார்த்தை நான் பேச மறு வார்த்தை நீ பேச கேட்டால் தான் என் இதயம் கூட சுருங்கி விரியுமாம் என்று வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கிறது.......ஒட்டு மொத்த ஊராறும் ஒன்று கூடி மாநாடு நடத்திக் கொண்டிருந்தாலும் உன்னுடன் நான் பேச முடியாமல் போனதால் அவை அனைத்துமே எனக்கு நிசப்தமாகித்தான் போனது....அங்கே இருக்கும் நீ ஆகாரம் எடுத்துக் கொண்டாயோ? என இங்கே இருக்கும் நான் அன்னம் உண்ண மறந்தேன்...அங்கே இருக்கும் நீ உறக்கிக்கொண்டிருப்பாயோ? என இங்கே இருக்கும் நான் உறக்கம் கலைத்து கனவினை தொலைத்து உன் நினைவினில் தவித்தேன்.... ஒத்த வார்த்த உன்னோடு பேச தானே இந்த பாவிமனம் ஏங்குது எல்லாம் தெரிந்தும் சாமி கூட துங்குது ..... *அவஸ்த்தைகள் ஆயிரம் என்றாலும் உன்ன தானே உள்ளம் தேடுது உன்னோட வாழத் தானே என் உயிர் கூட வாழுது.................!*

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 1:57 pm)
Tanglish : thavikkiren
பார்வை : 140

மேலே