பூத்திருந்த கண்கள்

உனக்கான பாதையில் நான்
உருமீன் காத்த கொக்குபோல்
காத்துக்கிடக்கிறேன்
உன் தரிசனம் எனும் மழை
இல்லாமல் என் இதயம்
வறண்டு கிடக்கிறது
பரிதி காணாத
சூரியகாந்தியைப்போல்
நீ இல்லாத நான்
போதும் இந்தவலி இன்னும்
என்னால் தாங்கமுடியாது
வந்துவிடு உன்
புன்னகையை சிந்திவிடு
தனியட்டும் என் துயரங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Apr-18, 10:18 am)
பார்வை : 782

மேலே