மனம் நிறைத்தாள் மங்கை
முத்துப் போல் மின்னும் உடல்
முகம் நிலவு வசீகரக் கடல்
வண்டு ஊரும் அவள் கண் மடல்
களித்து அங்கு மிங்கும் நீந்தும் கயல்
சுவை சொட்டும் சொற் தேன் புயல்
குணம் இனிக்கும் தேன் கரும்பு வயல்
சிறகடிக்கும் மனம் என்றும் அவள் அயல்
ஆக்கம்
அஷ்ரப் அலி