நட்பு பிரிவினை

நட்பு பிரிவினை!

ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை நாம்,
ஆயினும், உடன் பிறப்பாகவே வாழ்ந்தோம்
நட்பு எனும் நாடி துடிப்பின் வாயிலாக!

நீ நான் என்றல்லாமல் நாம் என்றல்லவா வாழ்ந்தோம் வெகு நாட்களாக !

தூரம் நமக்கு ஒரு தடையாய் இல்லை
கைபேசி எனும் நண்பன் நம்மை சேர்த்து வைக்கையில்!

ஒன்றல்ல இரண்டல்ல நாம் கதைத்த
நிமிடங்கள் ஆயிரமாயிரம் !

நான் ஒரு பாக்கியசாலி என்றல்லவா நினைத்தேன்,
என் சுக துக்கங்களில் பங்கெடுக்க உன் நட்பு இருந்ததால்!

அனால் நீயோ சொல்லாமல் புரிய வைத்தாய்,
அட முட்டாளே அது நிரந்தரமல்ல என்று!

ஊரெல்லாம் மகிழ்ச்சியாக கொண்டாடியது போகி பண்டிகையை
பழையவை கழிந்து புதியவை புகுமென எண்ணி!

அனால் நீயோ என் நட்பை அல்லவா பழையது என எண்ணினாய் !

நீ ஒரு கல்நெஞ்சக்காரி,
எப்படி உயிருடன் உள்ள என் நட்பை வெட்டி ஏறிய மனது வந்ததோ தெரியவில்லை !

ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் நாம் இருவர் அல்ல ஒருவர் தான் என சேர்த்து வைத்த நட்பை கொன்று என்னை அனாதையாக்கிவிட்டாயே !

இனி எப்போது உன் சிரிப்பை கேட்பேன் !

மரணம் என்னை அழைக்கும் முன் நீ ஒருமுறையேன் அழைப்பாயா!!!

காத்திருப்பேன் என்றும்,
உனக்காக அல்ல- உன்னுள் நான் தொலைத்த என் நட்புக்காக!!!




- வ.சரத்குமார்.

எழுதியவர் : சரத்குமார்.வ (11-Apr-18, 4:35 pm)
சேர்த்தது : sarathkumar
Tanglish : natpu pirivinai
பார்வை : 5820

மேலே