எந்தையின் பரிசு
எழுத்தாணி
நுனியில்
சிதறடிக்கப்பட்ட
முத்து
நான் .....
வியர்வை குளித்து
விலாசம் தந்த
விருட்சத்தின்
விதை
நான் ...
வார்ப்புகளில்
வார்க்கப்பட்ட
அவன்
வாய்மையின்
நகல் ...
காமம் இல்லா
காதல் பரிசு
அவனின்
முதல்
முத்தம் ...
அம்பானை
கற்று தந்த
அவன்
அம்பானியின்
பிரதி ....
தேவதை
நீயென என்
தேவைகளை
செய்யும்
சேவகன் ...
உழைத்து
களைத்தாலும்
ஊறு கண்டாலும்
எனக்காய்
ஓடும்
எந்திரம் ...
என்
நன்றியின்
பதிவுகள்
நாலாயிர
பிரபந்தங்களாய்
உனக்கு ...
காத்திருக்கிறேன்....!
எந்தையே
உனக்கும்
ஒருநாள்
அன்னையாக...!!