இன்றோ என்றோ ஒரு நாள்

இன்றோ என்றோ ஒரு நாள் வெல்வது நிச்சயம்
முயற்சி என்னும் அச்சாணி நம்மிடம் இருந்தால்
காத்திருக்கும் காலங்கள் எல்லாம் கனவுகள் உண்மையாகிடத்தானோ
பொறுமையென்னும் உறவு நம்மிடம் இருக்கும் வரையில் தானோ
காத்திருப்பும் சாத்தியம்
வெற்றியும் சாத்தியம்
எல்லாம் கூறுவது எளிமையல்லோ
செய்வது கடினமே
அது உன் எண்ணத்தில்
எல்லாம் எளிமையாகிடுமே
அதுவும் உன் லட்சியத்தின் நம்பிக்கையில்
எல்லாம் மன உறுதி கொண்டால் வானமும் வசப்படுமே
மன உறுதி கொள்வோமே
தோழன் தோழியரே

எழுதியவர் : பிரகதி (12-Apr-18, 2:14 pm)
பார்வை : 528

மேலே