வீழாதே எழு

எத்தனை முறை வீழ்ந்தாலும்
மீண்டும் மனதை விடாதே
போராடு வீழாதே
தோல்வியே உனது வெற்றியென்று கூறு தோழனே
உனது அச்சமே உனது பலவீனம் என்று உணர் தோழனே
உனது துன்பமே உனது பலம் என்று கருது தோழனே
உனது கண்ணீர் துளிகள் உன் உவகைக்கு வித்தென்று எண்ணு தோழனே
உனது உழைப்பு உனது வியர்வை வெற்றிக்கு கிடைத்த முத்தென்று
கருது தோழனே
உன் நம்பிக்கை தான் உன் விதையென்று கூறு தோழனே உன் வீழ்ச்சியையும் வெட்சி புனைய கொள் தோழனே
வீழாதே எழு தோழனே

எழுதியவர் : பிரகதி (5-Apr-18, 11:48 pm)
பார்வை : 714

மேலே