தொட்டகுறையா, விட்டகுறையா - நகைச்சுவை- சிந்திக்க, சிரிக்க -கவிதை
இளவயதில் காவியுடை அணிந்து
கானகம் நோக்கி செல்கின்றான் ஒருவன்
துறவறம் ஏற்ற அவன் தவம் செய்திட,
அங்கு வயது முதிர்ந்த துறவி ஒருவர்
அவனைக் கண்டு,"ஏனப்பா இந்த
இளவயதில் இந்த துறவும் இங்கு வரவும்
என்று கேட்க, இளைஞன் அவன் கூறினான்
" ஐயா, இந்த உலகில் மூன்று முஐடியாதவை
உள்ளன, நாய் வாலை நிமிர்த்த முடியாது,
ஓயாமல் மணற்கரையை மோதும்
கடல் அலைகள் ஓயாது, என் மனைவியின்
குறைகள் ஓயாது, அவள் தேவைகளும் ஓயாது"
என் மனைவியின் ஓயா தேவைகள் என்
சித்தத்தைக் கலக்க, துறவு ஏற்றேன் ஐயா,
சித்தத்தை அவனிடம் கொண்டு அவன்
பாதத்தில் சரணடைய, துறவு ஏற்று
தவமிருக்க இங்கு வந்தேன் " என்றான்.
அதற்கு அந்த முதியவர் சொன்னார்,
" அப்பா, நான் இங்கு வனம் வந்து
இருபது வருடங்கள் ஆகின்றது
இங்கும் என் மனைவி வந்து அவள்
தேவைகளை என் பதத்தில் வைக்கிறாள்
என் பக்தையை.............
இது தோட்ட குறையா, விட்டகுறையா
இன்னும் தெளியவில்லை எனக்கு....
என்று சொல்லிவிட்டு போய்விட்டார்!!!!!!!!!!!!!!!!!
சித்தத்தை அவனிடம் கொண்டு அவன்
பதத்தில் நிறுத்த,இங்கு வந்தேன்