தன்னம்பிக்கை 4
என் நண்பனுக்காக,
விடியல் வரை காத்திருக்காதே!
கடலில் எதிர் திசையில் செல்லும்
படகை போல
காற்றின் எதிர் திசையில் செல்லும்
பறவைகள் போல
வாழ்க்கையில் தோல்வியின்
எதிர் திசையில் செல்
முயற்சிக்க மறக்காதே
முயலும் வரை அல்ல
முன்னேறும் வரை
தன் கையில் என்ன உள்ளது?
என சொல்லாமல்
தன்னம்பிக்கை கொண்டு
விடாமல் முயற்சி செய்
உன் கனவுகளை நிறைவேற்ற
உன் இலட்சியத்தை நிறைவேற்ற
சாதிக்க பிறந்தவன் நீ
வெற்றியை மட்டுமே சிந்தனையில்
கொள்!
விடா முயற்சி கொண்டு...

