ஆசிபா-குட்டி தேவதை

உடல் தேவை வந்தவுடன்
உறுப்பு அரிப்பு ஏற்படின்

உயிரென்ன
உணர்வென்ன

இப்படிதான் நினைத்திருப்பார்களோ
அந்த
காமுக கொடூர அரக்கர்கள்...

பிஞ்சு மனமடா
பால் குணமடா

சாதி வெறியை காட்ட வந்தீரோ?
சாதனை செய்ததாய் எண்ணி கொண்டீரோ?

இந்திய மனிதர்கள் மறதிகள் என்றும்
இந்த பதற்ற நாட்கள் முடிவடையும்
என்றும்
எண்ணி நிம்மதி கொள்கிறீர்களோ????

மனிதமே மறித்து விட்டதோ?
மண்ணில் சிறிதும் ஈரம் இல்லையோ??

உங்களுக்கான தண்டனை பல
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றன

சட்டத்தின் ஓட்டைகளில்
நீ தப்பித்தால்
சகலத்தின் அரசனான
இறைவனிடம் பதில் உரைக்க
உங்கள்
ஒவ்வொருவரின் ஒவ்வொரு
உறுப்புகளும் உருக்குலைந்து
சிதைந்து போகட்டும்...


என் சகோதரி ஆசிபாவை
உருக்குலைய வைத்ததற்கு

மனித தண்டனைகள்
பத்தாதடா

மாண்டு மாண்டு
மீண்டெழுந்து
எரிந்து எரிந்து
சாம்பலாகி
மீண்டும் மாண்டு போக வேண்டுமடா

எழுதியவர் : ஷாகிரா பானு (13-Apr-18, 8:32 pm)
சேர்த்தது : Shagira Banu
பார்வை : 330

மேலே