ஓ காஷ்மீரின் தேவதையே

அவளின் புன்னகை புயலையும்
தென்றலாய் மாற்றாதா..?

அவளின் கண்கள்
கருணையின் கோவில் அல்லவா..?

பால்மணம் மாறா அக்குழந்தை
பாரதத் தாயின் பிள்ளையல்லவா..?

ஓ..பாதகர்களே
உள்ளம் பதைக்கவில்லையா
பூஜிக்க வேண்டியவளை
புசிக்கும் வேளை..

கோவில்கள் இனி எதற்க்கடா
தெய்வக்குழந்தையை கொன்றபிறகு..

நாயுள்ளம் கொண்ட நரிகளே
தாயுண்டோ தமைக்கை உண்டோ
பெண் பிள்ளையும் உண்டோ உமக்கு
அவரை நீவிர் புசிப்பீரோ..?

எழுதியவர் : மிதிலை.ச.ராமஜெயம் (13-Apr-18, 10:26 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 118

மேலே