எங்கே செல்கின்றது உன் பயணம்

சித்திரை முதல் நாள்
"தமிழ் புத்தாண்டு"--- புத்தாடை
அணிந்து,
வாசலெங்கும் வண்ணக்கோலமிட்டு
இன்பம் கொண்டு வாழ!
என் முன்னோர்கள் ஏற்படுத்திய
விழா நாட்களில் ஒன்று!!

பங்குனியில் அறுவடை செய்த
பசியாற்றும் நெல் விளைச்சலை
பயிரிட்டவன் பார்த்து சிரிக்கும்
இன்பம் பொங்கும் நாளிது!
இன்றும் இன்பம் பொங்குகின்றது
சற்று மாற்றத்துடன்!!

பயிரிட்டவன் சிரித்த காலம்
சென்று- இன்று
பயிரிட்டவனைப் பார்த்து
இந்த உலகமே சிரிக்கின்றது!!

மாற்றங்களைப் போற்றும்
இந்த பூமியில் எத்தனையோ
மாற்றங்கள் மாறிவிட்டது-- அதனை
வரிசைப் படுத்திக் காணலாம்....

வண்ணக்கோலமிட்ட வாசல்கள் எல்லாம்
வண்ணமின்றி மாறிவிட்டது,

துள்ளி அடக்கும் ஜல்லிக்கட்டு
தூரம் வைத்து அழகு பார்க்கும்
காவல் கட்டாக மாறிவிட்டது!!,

புத்தாடை இல்லாத போதும்
இருப்பதைக் கொண்டு
சிறப்பாக முழு உடலை மறைத்த
மண்ணில் --- உடலில்
சில இடங்களைக் காட்ட
சில புத்தாடைகள் பிறந்துவிட்டது!!,

வறுமையாக வாழும் போதும்
வாய்க்கு அறுசுசை விருந்தளித்த
விருந்தோம்பல்கள் -- இன்று
வியந்து பார்க்கும் உணவாக
மாறிவிட்டது!!,

முகமதில்பூசி முழுவதும்
ஆரோக்கியம் கண்ட மஞ்சலை
சளிப்போடு பார்க்கும்
மிகப் பெரிய மாற்றம்!!,

வணங்கும் பண்பினை
வாழும் உலகிற்கே
கற்றுக்கொடுத்த என் உறவுகளுக்கு
தமிழ் வார்த்தையை பயன்படுத்த
மறுக்கும் மாற்றம்!,

வரவேற்புக்கு எட்டிச் சென்று
வரவேற்ற காலம் மாறிவிட்டு
வாய்க்கும் வாய்காலுக்கும்
மாநிலத்தை தாண்டும் மாற்றம்,

சந்தனம் பட்டும்
சாய்ந்து இருக்கும் மலரின்
வாசம் தொட்டும்
சுவாசித்த வாயுக்காற்று-- இன்று
சாகடிக்கும் விழக் காற்றாக மாறிய
மாற்றத்தின் முன்னேற்றம்!!,

மாற்றம் மாற்றம் என்று
மரபு வழியினை மறந்து
மாற்று வழியில் பயணம் செய்யும்
மனிதா....
எங்கே செல்கின்றது உன் பயணம்?,

மாற்று வழியில் இருந்தாலும்
முன்னேற்ற வழியில் இருந்தாலும்
மனித தேகம்
மண்ணிற்கு இறையில்லையென்று
மாற்றம் வருமா?....

அந்நியன் இடம்
பெற்றேனென்று பெருமை பட்டு
வாழும்-- என் மண்ணின் இனமே
இதற்குமேல் என்ன இருக்கின்றது?
நீ
இழப்பதற்கு?...
தன் மானம் முதல்
தன்னால் போகும் மானம் வரை
எல்லாமே மாற்றமென்ற
நிலையில் இருக்கின்ற போது!
நீ
இனிய நல்வாழ்த்துக்கள் என்று
வாழ்த்து தெரிவிக்கின்றாய்.....

இங்கு
இனி வாழவே முடியுமா?
என்று நினைத்து இருக்கும் போது
எட்படி இனிமையாக வாழ முடியும்?....

மாற்றம் ஒன்றே
என் முன்னேற்றமென்றால்--- அதனை
நீ
இப்படி மாற்ற முயற்ச்சி செய்....

நாம் இழந்த சுகங்களை
நம் தலைமுறைகள் காண
மீட்டெடுப்போம் என்ற மாற்றம்
நம்மையும்
நம் மண்ணையும்
முன்னேற்ற உதவும் என்பதை
எப்போதும் மறக்க வேண்டாம்...
.....................................................


( நாள்காட்டியில் குறிப்பிட்ட நாட்கள் விழா நாட்கள் இல்லை. நாம் விருப்பம் கொண்டு வாழும் ஒவ்வொரு நாட்ளும் தமிழனின் விழா நாட்கள் ஆகும்)

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Apr-18, 6:11 pm)
பார்வை : 278

மேலே