ஆசை

நான் அறியாமல்
நீ என்னைக் கவனிக்கும்
ஒவ்வொரு நொடியும்
தொலைந்து போகிறேனடா...
நான் கேட்காமல்
நீ எனக்குச் செய்யும்
ஒவ்வொரு உதவியிலும்
கரைந்து போகிறேனடா....
உன் அன்பெனும்
மழைச் சாரலில்
நனைந்து போகத் தான் ஆசை..
ஏனோ தெரியவில்லை.!!
என்னால் ஆசைமட்டும் தான்
படமுடிகிறது.....

எழுதியவர் : மு.முருகேஸ் (14-Apr-18, 9:10 pm)
சேர்த்தது : தமிழி
Tanglish : aasai
பார்வை : 298

மேலே