தவிக்கிறேன்

எங்கு இருந்தாயடா?
இத்தனை நாட்களாக...
என் வீட்டுக் கண்ணாடி பிம்பத்தை
பலமுறை பார்க்க வைத்தவனே!!
உன் கண்கள், என்னைத் தீண்ட
நான் வெட்கித்
தலைகுனிவதைப்
பார்த்து ரசித்தவனே!!!
எங்கு இருந்தாயடா?
இத்தனை நாட்களாக....
என்னை அடையக் கூடிய
தூரத்தில் நீயும்..
உன்னை அடைய முடியாமல்
நானும்
தவிக்கிறேன்...
எங்கு இருந்தாயடா??
இத்தனை நாட்களாக.....

எழுதியவர் : மு.முருகேஸ் (14-Apr-18, 11:34 pm)
சேர்த்தது : தமிழி
Tanglish : thavikkiren
பார்வை : 764

மேலே