பேயென பெய்த மழை

வானம் "பேயென பெய்த
மழை" யால் உயிரை கையில்
பிடித்துக் கொண்டு பூமிதிக்கற்று ஓலமிட்டு அழுகலாயிற்று
மழை வேண்டி நாமோ
காத்திருக்கிறோம் நம்
உயிரை வாங்க மழை
காத்திருக்கிறது என்று
இன்றல்லவோ புரிகிறது
ஓடைகள் நிறைந்தது இங்கே
பாடைகள் முறிந்தது;
ஏரி குளங்கள் மறைந்தது;
இவ்வளவு தானா வாழ்க்கை
என நம்பிக்கை குறைந்தது
ஆது பாது ஏதும் தோது இல்லா
நிலை உருவானது; ஒரு வாழ்வு முடிந்தது மறு வாழ்வு தொடறுமோ தொடறாதோ; மாற்றி அமைப்பானோ மாட்டானோ எல்லாம் இப்போது தோற்று வித்தவன் கையில்
இதயம் இருந்தோர் மனம்
இரங்கினர் அமைப்புகளும்
அணுகினர் உதவினர்
இவர்களும் ஆண்டவன்
அனுப்பிவைத்த ரூபங்கள்
தானோ என்று மனதில்
தோன்றவும் செய்தன
உண்ணக்கேட்கலாம் அதையும் உரிமையோடு கேட்க மனதில்
தயக்கம் உடுத்தக் கேட்கலாம்
அதையும் நம்மைப் போன்று உடுத்தாதிருப்போரே அதிகம்
மும்மாரி பெய்ய எத்தனை
சடங்குகள் தெய்வங்களுக்கு
இங்கணம் பேயென பெய்ய
வேறெவர் என்ன சடங்கை செய்து தொலைத்தனரோ யாரறிவார்
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"பேயென பெய்த மழை"
கவிதைமணியில்