எனது சுற்றமே

எனது சுற்றமே
உம்மை தவிர்த்து வேறு எதுவும் எனக்கில்லை
வாழும் காலங்களும் உமக்காக தான்
எமது சுற்றமே
எத்தனை நல்உள்ளங்கள் என்னைச் சுற்றி
மனதார வாழ்த்தும் சுற்றம்
மெய்சிலிர்க்க வைக்கும் பந்தம்
எனக்காக எதையும் செய்யும் அண்ணன் தம்பி
சிறுசிறு பொய் சண்டைகளிட அக்கா தங்கை
காவல்காரர்களாய் மாமன்கள்
எல்லாம் கற்று தர அத்தைகள்
எனது வழிகாட்டியாய் பாட்டன் பாட்டி
எல்லா உறவுகளும் தந்த அம்மா அப்பா
இன்னொரு தாய் தந்தையாய் பெரியம்மா பெரியப்பா
சித்தப்பா சித்தி
என்னை தாலாட்ட இன்னொரு தாயாய் அண்ணி
இத்தனை உறவுகள் இருக்கின்றதே
எல்லாம் தொலைபேசியில்
உண்மையிலோ எல்லாம் வெகுதூரத்தில்
எல்லா உறவுகளும் எனது தொலைபேசியில் உள்ள குழுமத்தில்

எழுதியவர் : பிரகதி (15-Apr-18, 12:21 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 1725

மேலே