வரத மகாத்மியம் ----
வாழை சில நன்றாக பழுத்து கனிந்து போய் இருக்கும் ( பாம்பு நஞ்சை (விஷத்தை) உடையது) வாழையைத் தோல் உரித்து உள்ளே தள்ளுகிறோம். (பாம்பு சட்டை உரைக்கும் (தோல்). நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே… உங்களுக்கு தெரியும். (வாழை உச்சியிலிருக்கும்) பல் பட்டால் வாழைப்பழம் துண்டாகி வயிற்றில் இறங்கும். (பாம்பின் விஷப்பல் பட்டாள் ஆள் மீள மாட்டான்). எனவே ரெண்டும் ஒன்றே.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்
பழனியில் முருகனை வேண்டுகிறார் காளமேகம்.
எனக்கு இந்த பெரும் உடம்பு (பெருங்காயம்) வேண்டாம். சீரான உள்ளத்தை, மனதை தந்தால் போதுமே. (சீரகம்) இந்த உபயோகமற்ற உடல் (வெங்காயம்) சுருங்கி சக்தியிழந்து
பிரயோசனமில்லாமல் இருந்து என்ன பயம் (சுக்கானால், வெந்தயத்தால் ) எதற்கு இந்த சரக்கை (நாட்டு மருந்து) இதை நான் சுமக்கவேண்டும். இந்த தத்துவப்பாடலில்
வெங்காயம், சீரகம், சுக்கு, வெந்தயம், என்ற பலசரக்கு வரும் அழகை ரசிக்கலாம்
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் – ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது
அடுத்தது ரொம்பவுமே கடினமானது. பொருள் புரியாது. ஏதோ பிதற்றல் போல இருக்கும்
காக்கைகா காகூகை,
கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக்
கொக்கொக்க — கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இதற்கு அர்த்தம் சொல்லச் சொல்லி ஒரு வாசகர் இன்று என்னை கேட்டிருந்தார்.
காக்கைக்கு — காக்காவிற்கு
ஆகா கூகை — ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது.
கோக்கு – கோ என்றால் அரசன்.
கூ = பூமி, அவன் நாடு,
காக்கை – காப்பது அரசாள்வது
கொக்கொக்க — கொக்கைப் போன்று
கைக் கை – விரோதிகளை வென்று
கா காப்பது.
கோர்வையாகச் சொன்னால் காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ரெண்டுக்கும் நட்பு கிடையாது காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும்.
ஒரு ராஜாவுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றியமையாதது. எதிரிகளை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்று பொருள்.
. SIVAN