இந்தியா தலைகுனிகிறது
------------------------------------------
பதிந்துள்ள
பாதச் சுவடுகள்
பட்டெனக் கூறுகிறது
பாதியில் முடிந்த
பச்சிளம் பாவையின்
பரிதாப நிலையை !
சுவரில் தெரிகிறது
சூறைக் காற்றாய்
சுழன்ற சூழலும்
கற்பின் தழலும்
மழலையின் நிழலும் !
கம்பனும் எழுதினான்
காப்பிய நாயகனின்
கரம்பற்றிய நாயகியை
காத்திட்டான் ராவணன்
கற்புடன் உறுதியாய்
கற்பனை என்றாலும்
காவியத்தில் நடந்தது
காஷ்மீரில் மாறியதேன் !
இன்றைய நிகழ்வால்
இதயம் வலிக்கிறது
இவ்வுலகம் பழிக்கிறது
இதயமிலா கயவர்களின்
இரக்கமற்ற செயலால்
இந்தியா தலைகுனிகிறது !
பழனி குமார்
16.04.2018