விடியா பொழுது

ஊருக்கே படி அளக்குற
அன்னலட்சுமி நீ தானே ..

உன் வயிறு தான் காயுது
பஞ்சம் என்னும் பசியாலே

உழைச்சு உழைச்சு உன் உடம்பும் வியர்வையால்
நனைஞ்சும் போச்சு

நனைஞ்சு போன வியர்வையும்
காஞ்சு தான் போச்சே

வானம் பாத்து வானம் பாத்து
என் கண்ணுக்கும் சலிச்சே போச்சு
உனக்கு எப்போ தான் வருமோ வியர்வை துளி ..

என் கண்ணுல இருக்குற கண்ணீரும்
வறண்டு தான் போச்சு.

உன் கண்ணீரை எப்போ தான்
காணிக்கையாக்குவியோ என் வானமே ...!!!!!

எழுதியவர் : ரோஜா (16-Apr-18, 6:08 pm)
Tanglish : vidiyaa pozhuthu
பார்வை : 504

மேலே