என்னவளே
பொய்க்கு எதிராய் உண்மையை மட்டுமே கூறும் உன் கண்கள்
அதை கூற இயலாமல் தவிக்கும் உன் உதடுகள்
தன்னை அறியாமல் நகங்களை கிள்ளும் உன் விரல்கள்
தயக்கத்தில் புரியாமல் கோலமிடும் உன் கால்கள்
மௌனத்தின் வாயிலாய் வெளிப்பட்டது உனது விடைகள்
அதை புரிந்து கொள்ள எனக்கு ஆனதடி இரண்டு வருடங்கள்...!!!
புரிந்ததை கூற வந்தேன் உன்னிடம்...!!!
அதை கேட்க நீ இல்லையடி இவ்விடம்...!!!

