காற்றும் கண்களும்

வீசும் காற்றும்
உன் பார்வையின் வீச்சும் ஒன்றோ?
என சந்தேகிக்கிறேன்

காற்றுக்கு தான் எவ்வளவு வேகம்?
உன் கண்களுக்கு தான் எவ்வளவு வலிமை?

காற்றின் ஒவ்வொரு பரிமாணத்தையும்
உன் பார்வையில் காண்கிறேன்

சூறாவளி காற்றை - சிவந்த
உன் கண்களின் கோபத்திலும்

தென்றல் காற்றை - கண்களாலே
என்னை வருட நினைக்கும்
உன் அன்பிலும் காண்கிறேன்

நான் எங்கு சென்றாலும் விடாமல்
என்னை தொடர்கிறது இந்த காற்று
உன் பார்வையைப் போல

காற்று உன் கண்கள்
இவையிரண்டில் இருந்தும் விடுபட
எங்கு செல்வேனோ நான் அறியேன்!

நான் இறந்தாலும் இவையிரண்டும்
என்னைத் தொடர்வதை - நிறுத்தாது
என்பதையும் நான் அறிவேன்!

எழுதியவர் : ஸ்ரீ (17-Apr-18, 1:27 pm)
Tanglish : kaatrum kangalum
பார்வை : 408

மேலே