அநாதையாய் இரு ஆனந்தம் பெறு

அடிபட்ட பாம்பு நான்..
ஆத்திரக் கொழுந்து நான்..
இரக்கமில்லா உலகம்..
ஈரமில்லா மனிதர்கள்..
உண்மையை யார் மதிப்பாரென
ஊளையிட்டு உரைக்கும் ஆசிரியை..
என்ன கல்வி இது..?
ஏது கற்பிக்கிறீர்கள்..?
ஐயமில்லா மனதில்..
ஒவ்வாமையை ஏன் விதைக்கிறீர்கள்..?
ஓங்கி உயர்ந்த பரம்பரை இது..!!
உண்மையை மொழியாதே
உதாசீனபடுவாய் என்றாள் ஒருத்தி..
அவளின் மாணவி
தூய்மையான தாய்மையை உணராது
தவறாய் மொழிந்தாள்..!!
பார்த்தாயா..??
நீ எதை விதைக்கிறாயோ அதுவே முளைத்து உன் முன் நிற்கும்.!!
உண்மையை
உயிர்போல்
உயர்த்து என்றேன்..??
பேச்சில் பொய்..
செயலில் பொய்..

கடந்தகாலத்தை
கடுகளவு புரட்டிபார்..!!
உன் மனசாட்சிப்படி
உண்மையை தேடு..!!

பொய்யிலே காலத்தை கடப்பது எங்ஙனம்..!!
கடவுள் பொய்யில்லை என உணர்ந்தேன் அங்ஙனம்..!!


உண்மையில்லா உலகம்..
நேர்மையில்லா உறவு..
பிறரை துன்பித்து மகிழும் மனிதர்கள்..
மிரட்டி மீன்பிடிக்க நினைக்கும் மிருகங்கள்..
பக்தியை பைத்தியமென உரைக்கும் பித்தர்கள்..
தமிழை தரமில்லையென தவிர்க்கும் தலைவிகள்..!!

தமிழில் பேசினால் பலர்முன் ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என கடிந்துகொள்ளும் பிறமொழி ஆசான்..!!
ஆங்கிலமற்ற தன் மொழியில் மட்டும்
ஓயா உரையாடல்கள் என் சக மாணவருடன்..!!

தன் மொழிக்க்கு ஒரு நியாயம்..!!
தமிழ்மொழிக்கு பல நியாயமாம்..!!


எதை வளர்க்கிறோம்..??
தன்னம்பிக்கை தரையோடு வெட்டிவிட்டு..!!!

எதை விதைக்கிறோம்..??
கலாச்சாரம்(culture) சீர் கெட்டாலும் கம்யூனிகேசன் (communication) முக்கியம் என முழங்கும் முட்டாள்களே..!!

இலக்கு(destination) எது..??
போகும் பாதை தமிழோ பிறமொழியோ..!!
தெளிவான தன்னம்பிக்கையை வளர்த்தியுள்ளோமா..?
சரி-தவறு எது என
பகுத்தறியும் பாவம் பயிற்றுவித்தோமா..??
என்றெல்லாம் அறியாமல்
வழிநடத்தல் என்ற பெயரில் ஆங்கிலம் இல்லையேல் நீ அரைகிருக்கன் என
அதட்டும் ஆசான்கள்..!!!
அதையும் புத்தியேயில்லாமல்
ஏற்று பெற்ற பிள்ளையை
அடிக்கும் அரக்க பெற்றோர்கள்..!!

எதை செய்தாலும் குறை கூறியே மண்ணாக்கும் உலகம்..!!
வைரமுத்துவின் வரிகளையே
வழிகாட்டியாய் நினைக்கிறேன்..!!

"அப்படி இருந்தால் அதுவும் தப்பு..
இப்படி இருந்தால் இதுவும் தப்பு..
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்"

என்றார் அவர்.. முற்றிலும் உண்மை..


இவர்கள் மத்தியில் நம்பிக்கை, பாராட்டு, ஊக்கம், மரியாதை, ம*** என எதை எதிர்பார்க்க..??

ஏமாற்றமே மிஞ்சும்..!!

குறை யாரிடம் என அறியாமல் குறைகூறும் மனிதர்களுடன் வாழ்வதைவிட

அநாதையாய் வாழ்வது எவ்வளவோமேல்
அம்மா.!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (17-Apr-18, 3:53 pm)
பார்வை : 745

மேலே