லிங்க வடிவத்தின் பின்னணி இரகசியங்கள்

உலகில் ஆன்மிகம் அதிகமாக, பல வெவ்வேறு வழிகளில், முறைகளில் பின்பற்றப்படும் நாடு இந்தியா என்பது யாவரும் அறிந்ததே. கடவுளுக்கு உருவம் கொடுத்து வழங்குபவர்களும் இந்தியர்களே.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு கடவுள் பிரபலம். ஆனால், இந்தியா முழுக்க பிரபலமாக இருப்பது சிவபெருமான். சிவபெருமானுக்கு மனித உருவம் இருப்பினும். அவரை லிங்க வடிவில் தான் பெரும்பாலான கோவிலில் வணங்கி வருகிறோம்.

இந்த லிங்க வடிவம் மிகவும் தனித்தன்மை உடையது. இதன் பின்னணியில் பல இரகசியங்கள் மற்றும் அதை விவாத பொருளாக்கி பல சர்ச்சைகளும் கூட இந்தியாவில் எழுந்துள்ளன...

(குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், பல்வேறு விடயங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே. இது தான் உண்மை, இது முற்றிலும் பொய் என ஊர்ஜிதப்படுத்துவது அல்ல.)

ரோமானியர்கள்!

சிவலிங்க வழிபாடு இந்தியாவிலும், இலங்கையிலும் தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த கருத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் பிரயபாஸ் (Prayapas) என்ற பெயரில் ரோமானியர்கள் சிவலிங்க வடிவதை வணங்கி வருவதாக ஒரு தகவல் இருக்கிறது.

பாபிலோனா!

ரோமானியர்களுக்கு முன்னர் சிவலிங்க வடிவத்தை பாபிலோனாவிலும், பண்டைய காலத்து நகரமான மெசபடோமியா (Mesopotamia), ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவிலும் வழிபாட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பிறப்புறுப்பு!

லிங்க வடிவானது ஆணுறுப்பை குறிப்பது என்ற கூற்றுகளும் இருக்கின்றன. உண்மையில் ஆணின் நிர்வாண தோற்றத்தை லிங்க தோற்றம் என்றே கூறியுள்ளனர் பழங்காலத்தில்.

இதற்கு மிக எளிதான ஆதாரம் வேண்டுமெனில், செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு காட்சியில் சோழ அரச கதாபாத்திரம் ஏற்ற நடிகர் பார்த்திபன் தனது நிர்வாண கோலத்தை "தன்னை லிங்க தரிசனம் கண்டுவிட்டாளே.." என்ற வசனம் இடம் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

ஆம்! ஆணின் பிறப்பை அக்காலத்தில் லிங்கம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சமஸ்கிருதம்!
லிங்கம் என்பதற்கு ஆணுறுப்பு என்ற பொருளும் இருந்திருக்கிறது என்பதை நாம் அறியும் அதே நேரத்தில் சமஸ்கிரதத்தில் லிங்கம் என்பதை எதை குறிக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சமஸ்கிருத மொழியில் லிங்கம் என்றால் ஓர் செயலின் பண்புகள் என்ற பொருளும் இருக்கிறது என சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

மேலும், சமஸ்கிரத மொழியில் யோனி என்பது கருவாய் மற்றும் ஒரு இடத்தின் துவக்கம் என்ற பொருளும் அறியப்படுகிறது. இதுவே, தமிழில் யோனி என்பது பெண் குறியை குறிப்பதாக உள்ளது.

ப்ரோடன், நியூட்ரான், எலக்ட்ரான்!
சிவலிங்கத்தை காஸ்மிக் கரு என்றும் கூறுகிறார்கள். டானிஷ் ஆராய்ச்சியாளர் லிங்க வடிவம் ப்ரோடன், நியூட்ரான், எலக்ட்ரான் கொண்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

பண்டையக் காலத்தில் ப்ரோடன், நியூட்ரான், எலக்ட்ரான், மூலக்கூறுகள் மற்றும் சக்தி ஆனது லிங்கம், விஷ்ணு, பிரம்மா மற்றும் சக்தியை குறிப்பதாக அறியப்படுகிறது.


பிரபஞ்சம்!
லிங்கம் மற்றும் யோனியின் வடிவமானது பிரபஞ்சத்தின் உருவாக்கத்தை குறிக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள். லிங்கம் என்கிற சிவம் முடிவற்ற நெருப்பை குறிக்கிறது. யோனி என்கிற சக்தி ஒரு இடத்தின் துவக்கத்தை குறிக்கிறது.

இவை, முடிவற்ற நெருப்பு பிழம்பான பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குகிறது என்ற கூற்றும் இந்த வடிவத்தின் அர்த்தமாக அறியப்படுகிறது.

ஆவுடை லிங்கம்!
லிங்கம் என்பது வானத்தை குறிக்கிறது, ஆவுடை என்பது பூமியை குறிக்கிறது. இதனால், இந்த இரண்டின் வடிவமான முழு லிங்க தோற்றம் விண்ணுக்கும், மண்ணுக்கும் சிவன் எழுந்தருளியதை குறிக்கிறது என ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.

மேலும், சில குறிப்புகளில் ஆவுடை என்பதை குண்டம் என்பதையும், அதில் எரியும் நெருப்பாக சிவலிங்கம் குறிப்பதாகவும் அறியப்படுகிறது.


லிங்கம் வகைகள்!
சிவ சதாக்கியம், அமூர்த்தி சதாக்கியம், மூர்த்தி சதாக்கியம், கர்த்திரு சதாக்கியம், கன்ம சதாக்கியம் போன்றவை பஞ்ச லிங்கமாக அறியப்படுகின்றன.

இதில் கன்ம சதாக்கிய பீடமும், லிங்க வடிவமும் இணைந்த தோற்றத்தை மக்கள் பல பெயர்களில் அழைக்கின்றனர்...

சுயம்பு லிங்கம் - தானாய் தோன்றியது

தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடக்கூடிய லிங்கம்.

காண லிங்கம் - சிவமைந்தர்களான விநாயகர் மற்றும் முருகன் வழிபடும் லிங்க வடிவம்.

தைவிக லிங்கம் - இந்திரன், பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோர் வழிபடும் லிங்க வடிவம்.

ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

அசுர லிங்கம் - அசுரர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

மானுட லிங்கம் - மனிதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.


Posted By: Balaji Viswanath-September 28, 2017,

எழுதியவர் : (17-Apr-18, 6:28 pm)
பார்வை : 46
மேலே