திருமண நாள்

ஒருவனுக்கு ஒருத்தியை
மானிடர்கள் வர்க்கத்திலே
நிர்ணயிக்கும் சுவடிகளோ
தெய்வங்களின் கக்கத்திலே
நிச்சயமோ சொர்க்கத்திலே
உள்ளத்து உள்ளோட்டம் திரு
மண நாள் கொண்டாட்டம்
சுற்றமங்கே சூழ்திருக்கும்
நண்பர்களும் சேர்ந்திருக்க
முற்றமோ அது மண்டபமோ
இருப்போரோ இல்லாதாரோ
அதுவல்ல இங்கே கணக்கு
மணவரையில் மாப்பிள்ளை
பிள்ளையாய் இருக்குமவன்
புருஷன் வேடம் எடுப்பதற்கு
தருவாளா தம் மனதை என
காத்தான் தாலியை சூடிட
போதுமிந்த அலங்கரிப்பு
போகவிடும் மணவரைக்கு
கணவன் காத்திருக்கலாம்
நேரங்காலம் காத்திருக்குமா
கழுத்தை நீட்டி தாலி வாங்க
சேரப் போகும் இதயங்கள்
இருகரம் விரைந்து கோர்க்க துடிதுடித்திடலானார்கள் சடங்கு சம்பரதாயங்கள் தீரும் வரையில் பொருக்கு தற்கில்லையோ அவர்கட்கு
சிறு பிரிவையும் தாங்காத
இதயங்கள் இருக்கும் வரை
ஒரு குறையின்றி உறவை
காப்பாற்றி காவியமாக்கு
காலங்கள் மறவாதிருக்கும்
நாளே நிஜ " திருமண நாள்"
•••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"திருமண நாள்"
கவிதைமணியில்