கணவனின் அன்பு பரிசு

என்னவளே...!
அழகாய் இருப்பதால் அணைக்கவில்லை
அன்பாய் பார்த்து கொள்கிறாய் அனைவரையும்...!
ஆடம்பரமாய் இருப்பதால் ஆதரிக்கவில்லை
ஆசையாய் காத்திருக்கிறாய் - எனக்காக...!
இன்றோடு முடியாத உறவு உன்னோடு
இனிய வார்த்தையில் இணைய வைக்கிறாய்..!
ஈடு இணையில்லை உனக்கு
ஈன்றெடுப்பாய் நம் குலவிளக்கு...!
உறவுகள் கொண்டாடும் உன்னதமே
உள்ளத்தில் ஒளிவில்லா உயிரே...!
ஊன்றுகோலாய் இருப்பேன் என்றும்
ஊருக்கெல்லாம் உதவும் உனக்கு...!
என்றும் இளமையே...
ஏட்டிக்கு போட்டி இல்லா எளிமையே...!
மனதில் சுமப்பேன் உன்னை
மனம் போல் மணக்கும் மல்லிகையே...!