முதல் சம்பளம்

ஒரு இளைஞனுக்கோ அல்லது யுவதிக்கோ வாழ்கையில். படித்து நல்ல வேலை கிடைத்து, கை நிறையச் சம்பளம் வாங்கித் தன் விருப்பத்துக்கு ஏற்ப செலவு செய்வதை. எதிர்பாரப்பது சகஜம். இது எல்லோருக்கும் இலகுவில் நடப்பதில்லை. அதுவும் முதல் சம்பளம் கையில் வந்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. எதோ சாதனை படைத்தது போன்ற நிலை.
மட்டகளப்பில் இருந்து திருகொணமலைக்குப் போகும் A15 பெரும் பாதையில் ஏராவூர் தாண்டியவுடன் செங்கலடி என்ற ஊர் 15 கி மீ தூரதில் இருக்கிறது அங்கிருத்து தேற்கு நோக்கி பதுளைக்கு ஒரு பெரும் பாதை செல்கிறது. . செங்கலடியில் ஆரம்ப காலத்தில் செங்கற் சூளைகள் பல அமையப்பெற்ற இடமாகக் காணப்பட்டமையினால் இப்பெயர் வந்திருக்கலாம் என்பது இவ்வூர் வாசிகளின் வரலாற்றுச் விளக்கமாகும் .
பெரும்பான்மையினராக இந்துக்களும் மற்றும் கிறித்துவர்கள், முஸ்லிம்கள்போன்ற மதத்தினர் தமிழ்மொழியினைப் பேச்சு மொழியாகக் கொண்டு ஒற்றுமையுடன் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ரவீந்திரன் (ரவி), செங்கலடி ஓய்வு பெற்ற விதானையார் சிவராஜாவின் மூத்த மகன். கிழக்கு மாகாண பல்கலைகழகத்தில் ஆங்கிலம். தமிழ், சரித்திரம் ஆகியவற்றைப் பாடமாக எடுத்து இண்டாம் நிலையில் பட்டம் பெற்றவன். சிவராஜாவின் குடும்பத்தில் ரவிக்கு அடுத்து திருமண வயதில் ரேவதி , ரேணுகா என்று இரு சகோதரிகள். செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர்கள். மேலும் படிப்பைத் தொடர் பண வசதி இல்லாததால் ஏ லெவளோடு நிறுத்திக் கொண்டார்கள் அவர்களின் தாய் பார்வதி ஒரு தமிழ் ஆசிரியை. இன்னும் இரு வருடங்களில் ஓய்வு பெற்று விடுவாள்.. தங்களின் இரு மகள்களின் திருமணத்துக்கு ரவியின் ஊதியத்தை நம்பி இருந்தார்கள் சிவராஜா தம்பதிகள்.
படித்துப் பட்டதாரியானவுடன் ரவி முதலில் எதிர்பார்தது முதலில் ஆசிரியராக மட்டக்களப்பில் ஒரு கல்லூரியில் வெலை கிடைகும் என்பது . ஆனால் அவன் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. அவனோடு படித்துப் பட்டம் பெற்றவர்களில் அவனின் நண்பர்கள் ஜெயசேனாவும், ஹனீபாவும் . இருவரும் அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு வித தாமதமும இல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் வேலை கிடைத்தது.
சிவராஜாவின் தூரத்து உறவினர் ஒருவர் கல்குடா பாராளுமன்ற உறுப்பினர். அவரிடம் உதவி பெரும் நோக்கத்தோடு ரவியை அழைத்து அவனின் சம்மதம் பெற சிவராஜா அவனோடு பேசினார்.
“ மகன், உம்மோடு ஒன்றாகப் படித்து உம்மைவிட குறைந்த தரத்தில் சித்தியடைந்த உமது நண்பர்கள் இருவருக்கு ஒருசில மாதங்களில் ஆசிரியர் வேலை கிடைத்து விட்டது . அவரக்ளுக்கு மாதம் 4000 சம்பளமும் சலுகைகளும் .கிடைக்குது நீர் அவர்களை விட உயர்ந்த தரத்தில் சித்திப் பெற்றும் உமக்கு இன்னும் வேலை கிடைக்வில்லையே . தமிழும் ஆங்கிலமும் தாராளமாகப் பேசுவீர். எழுதுவீர் . சிங்களமும் உமக்கு ஒரளவுக்கு பேசத் தெரியும் அப்படி இருந்தும் உமக்கு வேலை கிடைக்காத காரணம் தெரியும் தானே “?
“ஓம் ஐயா . என் நண்பர்களின் கிட்டத்து உறவினர்கள் பாரளுமன்ற உறுபினர்களாக இருக்குறார்கள். அவர்கள் இருவரில் ஹனீபா கொழும்பு பாரளுமன்ற உறுப்பினரின் மகளைத் திருமணம் செய்யப் போறான். அது தான காரணம்”
]“ எனக்கும் கல்குடா பாரளுமன்ற உறுபினர் சொந்தக்காரன். அவரின் மகளுக்கு நான் தான் நல்ல இடத்தில் திருமணம் பேசி செய்து வைத்தனான். அவள் இப்ப கணவனோடு அவுஸ்திரேலியா போயிட்டாள். அதனாலை அவரிடம் நான் எதுவும் உதவி கேட்டால் நிட்சயம் செய்வார். உன் வேலை விசயமாக நான் அவரோடு பேசட்டுமா “? சிவராஜா மகனைக் கேட்டார்
“வேண்டாம் ஐயா. என் கல்வி தரத்துக்கு ஏற்ற உத்தியோகம் வராமலாப் போகும். அவரிடம் எனக்கு வேலை எடுத்து தரும் படி கேட்டு ஏன் நீங்கள் கைகூப்பி கெஞ்சுவான் . எனக்கு அப்படி வேலை எடுக்க விருப்பமில்லை . அதோடு நானாகவே மேலும் படித்து . எனது அறிவையும், கொம்பியூட்டர் திறமையும் பாவித்து நான் வேலை எடுப்பேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு “
” ஏதோ உன் இரு சகோதரிகளின் திருமணம் பற்றி யோசித்து பதில் சொல்லு ரவி”
“ நான் சொன்ன பதிலில் மாற்றமில்லை ஐயா. எனக்கு அரசியல வாதிகளின் உதவி தேவை இல்லை. என் திறமையை வைத்து சம்பாதிக்க முடியும் ஐயா . என் இரு சகோதரிகளின் பொறுப்பு எனக்கு நல்லாய் தெரியும்” பதில் சொல்லி விட்டு அங்கு நில்லாமல் ரவி போய் விட்டான்.
”அத்தான் உங்களுக்கு ரவியின் பிடிவாதம் தெரியும் தானே. அவனுக்கு அரசியல் வாதிகளைக் கண்டாலே பிடியாது” என்றாள் அவரின் மனைவி பார்வதி.
****
இண்டர்நெட்டிலும் முக நூலிலும், லிங்கின்லும் தன் சுய விபரத்தையும் (Profile) படத்தோடு பதிவு செய்து இருந்தான் ரவி . அதோடு தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்து தர முடியும் என சுயு விபரத்தில் குறிப்பிட்டிருந்தான். மொழிபெயர்ப்பு செய்வதுக்கு என்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பதையும் தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தமிழை கணனியில் எழுதவும் கற்றுக் கொண்டான். ஒரு அகராதியையும் வாங்கினான் தேசிய மொழிக் கல்வி நிலையத்தில் கணனி மூலம் பயற்சியும் பெற்று அரச சான்றளித்த மொழிபெயர்ப்பாளர் ( Governmnet Certified Translator) என்ற சான்றிதழும் பெற்றான் . ஒரு வார்தைக்கு எவ்வளவு பணம் மொழிபெயர்ப்புக்கு பெறவேண்டும் என்பதைப் பற்றிய விபரம் அறிந்து வைத்திருந்தான் . ஆரம்பத்தில் வரும் தொகையில் 20 விகிதம் கழிவில் வேலை செய்து கொடுக்க முடிவு செய்தான் .
“என்ன மகன் எப்போதும் கொம்பியூட்டருக்கு முன் இருக்கிறியே பேப்பரை பார்த்து வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமே . எனது இனத்தவர் வைத்திலிங்கம் மாமா கொழும்பில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்கிறார். அவரிடம் போய் வேலை செய்கிறாயா?. அவருக்கு அவ்வளவுக்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் வராது. விருப்பம் இருந்தால் சொல்லு. உனக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் மட்டும் அவரிடம் வேலை செய் .உனக்குச் சம்மதம் என்றால் சொல்லு நான் அவரோடுப் பேசி வேலை வாங்கித் தாறன் .” பார்வதி மகனிடம் கேட்டாள்.
“ அம்மா எனக்கு என் சொந்த காலில் நிற்க விருப்பம். அது முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு . கொஞ்சம் பொறுமையாக நீங்களும் ஐயாவும் இருங்களேன் “ என்றான் ரவி
****
சில நாட்களுக்கு பின் தனக்கு வந்திருந்த மின் அஞ்சலைப் பார்த்த போது ரவி எதிர்பார்த்தபடி நடந்து விட்டது . கனடா டோரோன்றோவில் உள்ள நோர்த் யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் ஜான் ஸ்டீபன் என்ற பேராசிரியரிடம் இருந்து வந்த மின் அஞ்சல் அது . தான் எழுதிய “ஈழத் தமிழர் போராட்டம் ” என்ற 61.000 வார்த்தைகள் அடங்கிய ஆங்கில ஆராச்சி நூலை தமிழில் மொழி பெயர்த்து தரமுடியுமா? முடியும் என்றால் எவ்வளவு காலம் எடுக்கும். இலங்கை ரூபாவில் எவ்வளவு செலவாகும் என்று விபரம் கேட்டிருந்தார் ; தன் நூலை பற்றிச் சுருக்கமாக விபரம் எழுதியிருந்தார். ரவியின் தொலை பேசி எண், விலாசம் கேட்டிருந்தார் .
மொழி பெயரப்புக்கு, வார்தைக்கு 20 விதம் கழிவின் பின் இலங்கை ரூபாய் ஒரு இலட்சம் மட்டில் வரும் என்றும் இரு கிழமையில் செய்து தர முடியும் என்று ரவி அவர் கேட்ட விபரங்களோடு பதில் அனுப்பினான்.
இரு நாட்களுக்கு பின் முனைவர் ஜான் ஸ்டீபன் இருந்து ரவிக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் அவர் பேசினார் .
“ மிஸ்டர் ரவி . நான் ஜான் ஸ்டீபன் கனடாவில் இருந்து பேசுறன். உம்மைப் பற்றிய விபரத்தை உமது முகநூல் மூலம் எனது நண்பர் ஒருவர் சொல்லி அறிந்தேன் . நான் எழுதிய ஆராச்சிநூலை மொழி பெயர்க்க இங்குஒருவரைத் தேடியபோது அதிக விலை சொன்னர்கள். நூல் ஈழத் தமிழர் போராட்டம் பற்றிய ஆராச்சி நூல் என்ற படியால் இலங்கையில் உள்ள ஒருவரைக் கொண்டு மொழிபெயர்ப்பது நல்லது என்று என் நண்பர் ஆலோசனை சொல்லி உமது முக நூல் விபரம் தந்தார். அவர் உமக்கு ஆங்கில லேக்சராக யூனிவர்சிட்டியில் இருந்தவராம் அவர் பெயர் சந்திரனாம் . அவரைத் தெரியுமா உமக்கு”?
தனக்கு அறிமுகம் எப்படி கிடைததது என்பதை அறிந்து ரவி ஆச்சரியப் பட்டான்
“ என் ஆங்கில லெக்சரர் சந்திரன் கனடா வந்து விட்டாரா ?. அது எனக்குத் தெரியாதே. அவரை நான் கேட்டதாகச் சொல்லுங்கள். என்னை அறிமுகப் படுத்தியதுக்கு நான் நன்றி சொன்னதாக அவருக்குச் சொல்லுங்கள் சேர் ”
“ அவருக்கு நிட்சயம் சொல்லுறன் ரவி. நான் எனது நூலின் ஆங்கிலப் பிரதி PDF வடிவில் அனுப்புகிறேன் . பார்த்து விட்டு எவ்வளவு மொழி பெயர்த்து தருவதற்கு செலவாகும் என்று பதில் போடும். சுமார் 61,000 வார்த்தைகள், 260 பக்கங்கள் கொண்டது நூல். 1200 கனேடிய டாலருக்கு குறைய வந்தால் உமக்கு கொண்டிரக்ட் தர சம்மதம் என்றால் . பதில் போடும். வேலை திருப்தியாக செய்து தந்தால் உமக்கு இன்னொரு கொண்டிரக்ட்டும் எடுத்து தருவேன் நீர் முடிவெடுத்து விபரம் எனக்கு அறிவிக்கவும் உமகே முழுத் தொகையில் அடவான்சாக 50 விகிதம் உமது வங்கிக் கணக்குக்கு அனுப்புகிறேன் . மிகுதி பணம் வேலை முடிந்தது தருகிறேன் என்ன சம்மதமா”? ஜான் கேட்டார்
”தங்கியூ சேர் . முழுத் தொகையும் கனடிய டாலரில் 1000 மட்டில் தான் வரும்.. நான் என் வங்கிக் கணக்கு விபரம் இ மெயிலில் அனுப்புகிறேன்”: பதில் சொன்னான் ரவி
****
தனக்கு கிடைக்க இருக்கும் முதல் சம்பளம் பற்றி சிவராஜாவுக்கும் பார்வதிக்கும் ரவி செய்தியை சொன்ன போது அவர்கள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர்”
“என்ன ஒரு லட்சத்துக்கு மேலேயா உன் முதல் சம்பளம் . இது உன் இரு நபர்களின் இரு வருட சம்பளம் ஆயிற்றே” என்றார் சிவராஜா.
*அது மட்டுமல்ல ஐயா, இதை அவரின் திருப்திக்கு ஏற்றவாறு செய்து கொடுத்தால் இன்னொரு கொண்டிரக்ட்டும் எனக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல காலபோக்கில் மூன்று மொழிகளிலும் மொழிபேயர்க்கும் நிறுவனம் ஒன்று உருவாக்கும் திட்டம் எனக்குண்டு . அதில் என் சகோதரிகள் வேலை செய்யலாம் ”
“ அது சரி நீ ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க போகும் ஆங்கில நூல் எதைப் பற்றியது”?
“ஈழத் தமிழர் போராட்டம் பற்றிய ஆராச்சி நூல் ஐயா”
*****