நானொரு வேதாந்தி

வெறுத்துவிட்டேன் காதல் என்ற சொல்லையும்,
காதலி என்று நடித்தவளையும்..

அன்பை உமிழ்ந்த மனதிலிருந்து வெறுப்பை உமிழ வைத்தார்கள் சாதியில் சிக்குண்ட சிந்தனையற்ற மாக்கள்.

பிடித்த ஒன்றும் பறிபோனது.
மற்றதெல்லாம் மனதிற்கு பிடிக்காமல் போனது.
பிடித்தாலும் நிலைக்காது.
சென்றுவா காதலே!
நானொரு வேதாந்தி...

பற்றை அறுக்க இங்கு வந்தேன்.
வேஷம் ஒழிக்க இங்கு வந்தேன்.
காசு பணத்தை கௌரவம் என்றிடும் கனவான் கதறி அழிவதைக் காண வந்தேன்.

நெஞ்சிலே வைராக்கியம்,
தகர்க்க முடியாத அளவிற்கு வளர இறையே என்னோடு வருகிறாய் நீ மட்டுமே நிரந்தரம் என்று...

வேஷமிடும் இடத்திலும் பதவிக்காய் கோஷமிடும் இடத்திலும் கடவுள் இல்லை.
இருப்பதில்லை.
ஒரே வெறுப்பு.
அருவருப்பு.

கெட்டொழியும் மானிடமே கேடுகெட்ட நடைமுறைகளாலே...
வேடிக்கை காணவே இங்கு வந்தேன்.

கெட்டவை அழித்து நல்லவற்றை நிச்சயப்படுத்துங்கள் என்று வருவோரிடம் முதலில் நான் சொல்லுவது உங்களை நீங்கள் அறியுங்கள் என்பதே...

இன்பம், துன்பம் இரண்டிற்கும் இடையே இன்பத்தில் சிரிப்பும், துன்பத்தில் அழுகையும் கொண்டு வாழ்வோரே எதற்காக சிரிக்கிறீர்?
எதற்காக அழுகிறீர்? என்பதை அறிந்தால் உங்களை நீங்கள் அறிவது சுலபம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Apr-18, 5:55 pm)
பார்வை : 354

மேலே