உலக நாயகனும், அருமை நட்சத்திரமும்

காசு கொடுத்தால் கடவுளாகவும் நடிப்பான் நாத்திகம் பேசிடும் அந்த நரன்.
கட்சி தொடங்கியதில் இருந்து பேசும் வார்த்தைகள் அனைத்தும் அநர்த்தம்.

மதுவை முழுவதும் ஒழித்துவிட்டால் இளைஞர்கள் வேறு பெரிய போதையில் சிக்குவார்கள் என்கிறான்.
மதுவில் இருந்து போதை ஆரம்பமாகிறது,
எத்தவறையும் செய்ய மதுவையே துணையாகக் கொள்கிறான் என்பதை அறியாத மூடன் போல் பேசுகிறான் முடமான நாக்கால்.

அருவருக்கும் வகையில் ஆணவம்,
உலக நாயகனென்றொரு பட்டம்,
காலில் விழும் மடையர் கூட்டம் சூழ்ந்துவிட்டால் தலைகால் புரியாத பேச்சுகள்.

அதற்கு அடுத்தபடியாக அருமை நட்சத்திரம்,
காலங்கள் கடந்த போதிலும் பதவி ஆசையை தன்னில் நுழைவித்துக் கொண்டு தனக்கு பதவி மேலே ஆசையே இல்லை என்று வேதாந்தம் பேசுகிறான்.

நான் காணாத வேதாந்தமா?
பணம் கோடி கோடியாய் கொட்டிக் கிடக்கிறதாம்.
பணத்தின் மேல் தனக்கு ஆசை இல்லையாம்.
ஆசை இல்லாமலா அவ்வளவு பணம்?
ஒரு படம் நடிக்க அவ்வளவு சம்பளம்?

மகாத்மாவின் மீதே கலங்கம் கூறி கோட்சே வேஷமிட்ட உலக நாயகனையும்,
இரவுடிசத்தை அரசியல் என்றிடும் அருமை நட்சத்திரத்தையும் நம்பினால் தமிழகம் சுடுகாடு தான்.
தமிழ் கலாச்சாரம், பண்பாடெல்லாம் அழிந்தே போகும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Apr-18, 5:14 pm)
பார்வை : 896

மேலே