வயல்வெளிகள்

அன்ன லஷ்மி கரங்களால்
அன்னத்தை அள்ளித்தரும்
கிண்ணத்தைப் போன்றது
அற்புத வயல் வெளிகள் !

வியர்வை சிந்துவோர்கள்
மிகுந்த எதிர்ப் பார்ப்புடன்
எண்ணும் எண்ணந் தானந்த
பச்சைப் பசும் வயல் வெளிகள் !

காலை அந்தி வேளைகளில்
தென்றலோடு விளையாடி
உணர்வைப் பாலாக்கி அப்
பாலை உரைய வைத்து நல்
பருக்கையாய்த் தந்திடும் ஈடு இணையற்ற வயல் வெளிகள்!

வெள்ளாமையைத் தந்து
இல்லாமையைத் தகர்த்த மண்; சக்தியற்று இருக் கின்றதை ஒருவர் புத்திக் கும் எட்டிய பாடில்லை !

விளையவில்லை என்கின்ற
இழி மொழியை நாவு உச் சரிக்க; நீ வளையவில்லை அதனால் நான் விளைய வில்லை என  மண் கூற
எவ்வளவு நேரமாகிவிடும் !

மாறாக நீ விளைய வில்லை அதனால் நான் வளைய வில்லை என்றே தன் சுய கௌரவத்தை காத்திடுவார்!

பாய்ச்சப் பாய்ச்ச குடிக்கும்
தண்ணீரை; பிறர் பசிக்கப்
புசிக்கத்தந்து  துடைத் திடும் அவர் கண்ணீரை; செய்யும் தொழிலை தெய் வமாய் மதித்திட்டால் !
•••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"வயல்வெளிகள்"
கவிதைமணியில்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Apr-18, 9:39 am)
பார்வை : 181

மேலே