நான் நீயாகிய நொடி
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணிமைக்கும் நேரமா?
காலைக்கதிரவன் கண்விழிக்கும் நேரமா?
தென்றல் காற்று என்னைத் தீண்டும் நேரமா?
தேனை வண்டு பருகும் நேரமா?
கருமேகம் கூடும் நேரமா?
மழைத்துளி மண்ணை தொடும் நேரமா?
அலைகள் உருவாகும் நேரமா?
அரும்புகள் இதழ் விரிக்கும் நேரமா?
எந்த நிமிடத்தில் நீ என்னுள் வந்தாய்?
மீண்டும் அக்கணம் தேடி செல்கிறேன்
உன்னை ஏற்ற அந்நேரத்தை - கனவிலும்
மறவாமல் இருக்க பொக்கிஷமாக்க தவிக்கிறேன்..